'டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் அதிரடி வசதி'... 'அவ்வளவு தான் இனிமேல் சின்ராசை கையில பிடிக்க முடியாது'... வெளியான அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டாஸ்மாக் எலைட் கடைகளில் இருக்கும் வசதி தற்போது அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ''தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 330 மதுபான கடைகள் உள்ளன. இந்த அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வங்கிகளிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் 7 வங்கிகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட மற்ற 7 வங்கிகளை விட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, குறைவான ஒப்பந்தப்புள்ளி தொகை குறிப்பிட்டு மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்குத் தேர்வாகி உள்ளது.
இதையடுத்து டாஸ்மாக் இயக்குநர் குழுமம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இதுதொடர்பான ஒப்பந்தம் செய்துகொள்ள டாஸ்மாக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்குரிய தொகையை டெபிட் கார்டுகள், யு.பி.ஐ. (ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம்), பீம் யு.பி.ஐ., யு.பி.ஐ. கியூ ஆர் கோட், கிரெடிட் கார்டு, இன்டர்நேஷனல் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்த முடியும்.
மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவும் பணியை இரண்டு மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இந்த மின்னணு விற்பனை கருவியைக் கையாள்வதற்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படும். முன்னதாக சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்கள் வழியாக விற்பனைத் தொகையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தது.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனைத் தொகையை மின் மயமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இந்த அறிவிப்பு மது பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாங்களே!”.. மதுரை டூ சிவகங்கை.. சிவகங்கை டூ சோழவந்தான்.. படையெடுக்கும் மதுபிரியர்கள்!
- 'மதுரையில் ஊரடங்கு...' 'சிவகங்கையை' சீரழித்த 'குடிமகன்கள்...' 'சமூக இடைவெளியா?...' 'அப்டின்னா?...' கட்டிங் உள்ள போய் கட் பண்ணா... லேண்டிங் இன் செவ்வாய் கிரகம்...
- வடசென்னை அருகே பயங்கரம்!.. சாலையில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ... வெடித்து சிதறிய பொருட்கள்... விசாரணையில் அம்பலமான பகீர் தகவல்!
- மதுவுக்கு அடிமையாகி... ஆயுள் தண்டனை பெற்று... சிறைவாசம் அனுபவிக்கும் குரங்கு!
- போதையில் உச்சம் தொட்ட ஆசாமி!.. 3 மணி நேரம் தொடர் நீச்சல்!.. போலீஸ் வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்!
- 'பெத்தவங்க இத கூட கேட்க கூடாதா'... 'நண்பர்கள் சேர்ந்து செய்த விஷ பரீட்சை'... நிலைகுலைந்து போன குடும்பம்!
- திருமணம் செய்து வைக்குமாறு... குடிபோதையில் தந்தையின் கையை கடித்த மகன்!.. ஆத்திரமடைந்த தந்தை செய்த கொடூரச் செயல்!.. குடியால் நொறுங்கிய குடும்பம்!
- VIDEO: ‘கடை இருந்தே ஆகணும்’.. டாஸ்மாக் முன் தீக்குளிக்க முயன்ற ‘குடிமகன்’.. கடைசியில் ‘ட்விஸ்ட்’ வச்ச மக்கள்.. வைரல் வீடியோ..!
- ‘தலைக்கேறிய போதை’.. பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த ‘கொடும்பாதக செயல்’.. பதபதைக்க வைத்த வீடியோ..!
- 'அம்மாவின் (ஜெ)' பிள்ளை வேஷம் போட்டுத் 'தப்பிக்க முடியாது...' 'வாழ்த்து' சொன்ன தாய்குலமே 'தீர்ப்பு' சொல்லும்... 'கடுமையாக சாடிய கமல்ஹாசன்...'