"என்கிட்ட சொல்லாம என் நம்பரை இன்னொருத்தருக்கு கொடுத்துட்டாங்க".. நெட்ஒர்க் நிறுவனத்துக்கு எதிராக கோர்ட்டுக்கு போன நபர்.. நீதிபதி வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் தன்னுடைய மொபைல் எண்ணை அடுத்தவருக்கு கொடுத்துவிட்டதாக தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் ஒருவர். இந்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | "இதெல்லாம் எப்போ கிளீன் பண்ணுவீங்க.. என் மக்களுக்கு நான் பதில் சொல்லணும்".. கழிவு நீரில் இறங்கி போராடிய MLA.. வைரலாகும் வீடியோ..!

மொபைல் எண்

கடலூர் மாவட்டத்தின் கீரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூரணன். இவர் தனது மொபைல் நம்பரை தனக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் வழங்கிவிட்டதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நுகர்வோர் கமிஷனின் தலைவர் டி கோபிநாத், உறுப்பினர்கள் வி என் பார்த்திபன், டி கலையரசி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில், எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கப்படாமல் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது மொபைல் நம்பரை பிளாக் செய்ததுடன் அந்த நம்பரை வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டதாகவும் இதனால் தன்னுடைய காண்டாக்ட்ஸ் அனைத்தையும் இழந்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பூரணன் கூறியிருக்கிறார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நடுவர்கள் பூரணனுக்கு 60 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கிட வேண்டும் என தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.

இழப்பீடு

மோசமான சேவையை வழங்கியதற்காக 25,000 ரூபாயும், மொபைல் நம்பரை இழந்ததால் அனைத்து காண்டாக்ட்ஸ்-ஐ இழக்க நேரிட்டதற்கு 30 ஆயிரம் ரூபாயும், சட்ட செலவுகளுக்கு அவருக்கு 5000 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என நடுவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது கடலூர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒருவரது மொபைல் எண்ணை பிறருக்கு வழங்குவது குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி ஒரு வாடிக்கையாளர் தனது மொபைலில் இருந்து 90 நாட்களுக்கு தனது இணைப்பை துண்டித்திருந்து, ரீசார்ஜ் மதிப்பு ரூ.20க்கு குறைவாக இருந்தால், அந்த எண்ணை மற்றொரு வாடிக்கையாளருக்கு வழங்குவதற்கு முன், மொபைல் ஆபரேட்டர் மேலும் 15 நாட்கள் (90 நாட்களுக்குப் பிறகு) வழங்க வேண்டும்.

இந்த அவகாசத்தில் வாடிக்கையாளருக்கு முறையான தகவல்கள் மற்றும் சிம் கார்டு குறித்த நிலவரத்தை நிறுவனம் தெரிவித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "அதுமட்டும் நடந்துட்டா நம்மகிட்ட ஒரு சாட்லைட் கூட மிஞ்சாது"..குண்டை தூக்கிப்போட்ட ஆராய்ச்சியாளர்கள்..!

CUSTOMER, COMPENSATION, MOBILE NETWORK OPERATOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்