'மதுரையில் ஊரடங்கு...' 'சிவகங்கையை' சீரழித்த 'குடிமகன்கள்...' 'சமூக இடைவெளியா?...' 'அப்டின்னா?...' கட்டிங் உள்ள போய் கட் பண்ணா... லேண்டிங் இன் செவ்வாய் கிரகம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் தீவிர ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான குடிமகன்கள் சிவகங்கையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

மதுரையில் ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை தீவிர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், மதுரையைச் சுற்றியுள்ள சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு குடிமகன்கள் ஆயிரக்கணக்கானோர் படையெடுத்துள்ளனர்.

சிவகங்கையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக இடைவேளையின்றி ஒருவரை ஒருவர் முண்டியடித்து தியேட்டரில் டிக்கெட் வாங்குவது போன்று போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி வருகின்றனர்.

மாவட்ட எல்லை என்பதால் போலீசாரும், சுகாதார துறையினரும் யார் பணிக்கு வருவது என்கிற குழப்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்