நேர்ல மீட் பண்வோமா...? 'ரொம்ப நாளா பேஸ்புக்ல சாட் பண்றோம்...' 'முந்திரி தோப்புல வெயிட் பண்றேன்...' 'நண்பனுக்கு இருந்த இன்னொரு முகம்...' - உச்சக்கட்ட ஷாக்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முகநூல் நண்பனை ஆசையாக பார்க்க சென்றவரை மிரட்டி பணம் பறித்த சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

24 வயதான சந்தோஷ் என்னும் இளைஞர் கடலூர் நகரில் உள்ள மோகன் நகரில் வசித்து வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது வாஞ்சிநாதனுக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளனர்.

நீண்ட நாட்களாக போனில் பேசிகொண்டிருந்ததால் இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் வாஞ்சிநாதனை தேடி கடலூரில் இருந்து குயிலாப்பாளையம் வந்துள்ளார். அந்நேரத்தில் வாஞ்சிநாதன் வீட்டில் இல்லாமல் வீட்டுருக்கே இருக்கும் ஒரு இடத்தில் இருப்பதாகவும், அங்கே வருமாறு சந்தோஷை வாஞ்சிநாதன் அழைத்துள்ளார்.

வஞ்சிநாதன் சொன்ன இடமான முந்திரி தோப்பிற்கு சென்ற பிறகுதான் தெரிந்துள்ளது வஞ்சிநாதன் ஒரு திருடன் என்று. முந்திரி தோப்பில் வாஞ்சிநாதனுடன் அவனது கூட்டாளிகளான லோகேஸ்வரன், வெற்றி, அருண் ஆகியோர் சந்தோஷை கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் செயின், 2000 பணம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு துரத்தியுள்ளனர்.

முகநூல் மூலம் நட்பாகி ஆசையுடன் பார்க்க வந்தால் இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்ததோடு சந்தோஷ் மன வேதனை அடைந்து, ஆரோவில் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ஃபேஸ்புக் நண்பன் வாஞ்சிநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட மூவரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இந்த மூவரும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் நண்பர்களாக நடித்து அடிக்கடி இதுபோல் கொள்ளையடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்