சைக்கிளில் வீட்டுக்குபோகும் போது கீழே விழுந்த வாலிபர்.. வலியால் துடிக்கவும்தான் அந்த விஷயம் தெரிஞ்சிருக்கு.. அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இடுப்பில் செருகி வைத்திருந்த மதுபாட்டில் உடைந்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைக்கிளில் வீட்டுக்குபோகும் போது கீழே விழுந்த வாலிபர்.. வலியால் துடிக்கவும்தான் அந்த விஷயம் தெரிஞ்சிருக்கு.. அதிர்ச்சி சம்பவம்..!
Advertising
>
Advertising

கடலூர்

கடலூர் மாவட்டம் சான்றோர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு வெங்கடேஷ் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது.

வேகத்தடை

இதனை அடுத்து வீடு திரும்பும் போது இரண்டு மதுபாட்டில்களை வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது வேகத்தடை ஒன்றில் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி வெங்கடேஷ் கீழே விழுந்துள்ளார். அதனால் அவரது இடுப்பில் செருகியிருந்த மதுபாட்டில்கள் உடைந்து அவரது அடிவயிற்றில் குத்தியுள்ளது. இதனால் அவர் வலியில் துடித்து உள்ளார்.

மதுபாட்டில்

உடனே அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் அவர் இடுப்பில் மதுபாட்டில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வெங்கடேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இடுப்பில் செருகியிருந்த மது பாட்டில் உடைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CUDDALORE, YOUTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்