“விடுதியில் தங்கி கைவரிசையைக் காட்டிய சென்னை திருடன்!”.. ஆக்‌ஷனில் இறங்கிய டியூஷன் ஆசிரியர்! ‘த்ரில்லர் பட’ பாணியில் கடலூரில் நடந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரி அரியாங்குப்பம், கடலூர் சாலையில் ஜோதி கல்வி மையம் என்ற பெயரில் டியூஷன் சென்டர் நடத்தி வருபவர் தமிழரசன்.

இவர் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு பக்கத்து அறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாணவர்களின் பெற்றோர் போல அலுவலகத்தில் நுழைந்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போனையும் மேசையிலிருந்து 1, 700 ரூபாய் ரொக்கப் பணத்தையும் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். பின்னர், வகுப்புகளை முடித்த ஆசிரியர் தமிழரசன் செல்போன் மற்றும் பணம் களவு போனதை பார்த்து அதிர்ந்ததும்,
சிசிடிவியை ஆய்வு செய்தபோது, அதில் நீல சட்டை அணிந்த மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அத்துடன், தனது தம்பியின், ஜிபிஎஸ் கொண்டு கண்காணித்துள்ளார். அப்போது செல்போன் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதனால் செல்போன் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை. பின்னர் மீண்டும் காலையில் ஜிபிஎஸ் கொண்டு ஆய்வு செய்தபோது, அந்த போன் கடலூர் பேருந்து நிலையம் அருகே இருப்பதாக காட்டியுள்ளதை அடுத்து, தமிழரசன் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் கடலூர் பேருந்து நிலையம் அருகே சிக்னல் காட்டிய இடத்திற்கு சென்று தேடிப்போக,  அங்கு சிடிவியில் பார்த்த அதே நீல சட்டை நபர், அங்குள்ள கடை ஒன்றில் களவு போன செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு, அருகில் நிற்பதைக் கண்டனர்.

உடனடியாக அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, செல்போன் திருடியதை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து, அரியாங்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  விசாரணையில் அவர் சென்னையை சார்ந்த புருஷோத்தமன் என்பதும் திருடுவதை தொழிலாக கொண்டவர் என்பதும், கடலூரில் விடுதியில் தங்கி வீடுகளை நோட்டமிட்டு கைவரிசையை காட்டி வந்ததும் தெரியவந்தது. எனினும் புருஷோத்தமனுக்கு கொரோனா உறுதியானதால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்