சீன பெண்ணை திருமணம் செய்த கடலூர் வாலிபர்! எப்படி ஆரம்பிச்சுது இவங்க லவ் ஸ்டோரி..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர் வாலிபர் ஒருவர் சீன பெண்ணை இந்திய கலாச்சாரப்படி மணந்துள்ளார்.

Advertising
>
Advertising

கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர்தான், சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாற, இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். முன்னதாக இவர்களிருவரின் திருமணம் குறித்து இவர்களது பெற்றோர்கள் யோசித்து தயங்கியதாக கூறப்படும் நிலையில் பிறகு அனைவரும் சம்மதித்ததாக தெரிகிறது.

சீனா மற்றும் பாங்காங்கில் தொழில் முனைவராக உள்ள பாலச்சர்ந்தருக்கும் சீனா நாட்டை சேர்ந்த யீஜியோவிற்கும் சமூக வலைத்தள ஆப் மூலம் பழக்கம் ஏற்பட,  இந்த பழக்கம் நாளடைவில் நட்பாகவும், பின்னர் காதலாகவும் மாறியுள்ளது. அதன் பின்னர் இருவரும் மனதளவில் இணக்கம் கொண்டு, இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர், உறவினர் சூழ திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.  அதன்படி கடலூர் முதுநகரில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் அனைவரது சம்மதத்துடனும், மணமகன் பாலச்சந்தர் சீன நாட்டைச் சேர்ந்த மணமகள் யீஜியோ கழுத்தில் இந்திய - இந்துத்துவ கலாச்சார முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார்.
இதற்கென மணமகன் பாலச்சந்தர் தமிழ் பாரம்பரிய முறையில் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்துகொள்ள,  மணமகள் யீஜியோ முழு தமிழ்ப் பெண்ணாகவே மாறி, பட்டுப் புடவை, தங்க ஆபரணங்கள் அணிந்துகொண்டார். பின்னர்  அக்னி குண்டம் சாட்சியாக, மந்திரம் ஓத, மங்கள இசை முழங்க, இந்து முறைப்படி இந்திய கலாச்சாரப்படி திருமாங்கல்யம் கட்டி இவர்களது திருமணம் நடைபெற்றது. பின்னர் பெண், மாப்பிள்ளை இருவரின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து பேசிய மணமகன் பாலச்சந்தர் இதன் பின்னணியை விளக்கினார். அதில் “திருமணத்திற்கு முன்பான எங்களது  அதே காதலுடன் நாங்கள் எங்கள் வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக தொடார்வோம்” என்று தெரிவித்துள்ளார். இதில், பாலச்சந்தர் திருமணத்துடன், அவரது சகோதரர் பாலமுருகனுக்கு கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பவித்ராவுடன் இதே முஹூர்த்தத்தில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

CUDDALORE, பாலச்சந்தர், சீன மணமகள், இந்து முறைப்படி திருமணம், சீன பெண்ணை மணந்த தமிழர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்