'ஆடம்பரமாக இருக்க வேண்டாம்'... 'சாப்பாட்டுல இது இரண்டு மட்டும் இருந்தா போதும்'... இறையன்பு கடிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும்போது அதிகாரிகள் ஆடம்பரமான உணவு வகைகளை ஏற்பாடு செய்ய வேண்டாம்.

மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நிலையில் ஜ.ஏ.எஸ் அதிகாரி இறையன்புவை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.

தற்போது கொரோனா காலம் என்பதால் தலைமைச் செயலாளராகப் பதவியேற்றதிலிருந்து இவர் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதுதவிர அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், உயரதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,  ''கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான் தற்போது மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அந்த சமயத்தில் அதிகாரிகள் எனக்காகச் சிறப்புச் சாப்பாடுகளை ஏற்பாடு செய்வதாகத் தெரிகிறது.

அந்த மாதிரியான சாப்பாடுகள் எதுவும் தனக்கு வேண்டாம். நான் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும்போது அதிகாரிகள் ஆடம்பரமான உணவு வகைகளை ஏற்பாடு செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாகக் காலை மற்றும் இரவு நேரங்களில் எளிய உணவும், மதிய நேரத்தில் 2 காய்கறிகளுடன் கூடிய சைவ உணவுகள் இருந்தால் போதும்'' என அந்த கடிதம் மூலம் ஆட்சியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்