'நிறைய பணம் வச்சுருக்கேன்...' 'கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கொடுத்து...' 'பொள்ளாச்சி போல்...' 3 வருடமாக மாணவிகளிடம் செய்த அட்டூழியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை மயக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய 3 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவிக்கு கடந்த சில நாட்களாக தெரியாத நம்பரில் இருந்து போனும், ஆபாச மெசேஜ்களும் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மாணவி, அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசும்போது, அதில் ஒரு ஆண் பேசியுள்ளார்.
தன்னிடம் நிறைய பொருட்களும், காசும் இருப்பதாக கூறி, நான் சொல்வதை நீ கேட்கவேண்டும் என்று சொல்லியுள்ளார். இதையடுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் அந்த கல்லூரி மாணவி. புகாரின் பெயரில் விசாரணை நடத்தும் போது தான் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளிவந்துள்ளது.
ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை தல்லாகுளம் பகுதியில் ரெஸ்டாரண்ட், டிரேடர்ஸ் மற்றும் செல்போன் கடை நடத்தி வரும் 3 வாலிபர்கள் ஒண்றிணைந்து அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி மற்றும் பள்ளியில் படித்து விடுதியில் தாங்கிவரும் மாணவிகளை குறிவைத்துள்ளனர்.
மேலும் ரீசார்ஜ் செய்ய வரும் மாணவிகளின் எண்ணை எடுத்து அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் செய்து நண்பர்களாகி உள்ளனர். அதையடுத்து ஆசை வார்த்தை பேசி வெளியே அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி கொடுத்து காதல் வலையில் விழவைத்துள்ளனர். மேலும் அதன் பிறகு தங்களின் கைவரிசையை காட்டி அவர்களின் ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், குளிர்பானங்களில் போதை மாத்திரைகளை ரகசியமாக கலந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதனை காட்டி தொடர்ந்து மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருமானம் பார்த்துள்ளனர்.
விடுதியில் இருக்கும் பிற பெண்களுக்கும் உணவுப்பொருட்கள் பார்சல் கொடுப்பது போல் மதுப்பாட்டில்களை கொடுத்தும், சில மாணவிகளை மயக்கியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் பல இளம்பெண்களை சிக்க வைத்து, வாழ்க்கையை சீரழித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வித்தையை அவர்கள் 3 வருடமாக செய்து வருவது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க தயங்கியதால் இவர்களின் ஆட்டம் 3 ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இப்போதும் மாணவிகள் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருவதாகவும், மேலும் புகார் அளிக்கும் மாணவிகளின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனவும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலா கூறியுள்ளார்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரெண்டு 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு இப்டியா பண்ணுவ?... ஆத்திரத்தில் 'தங்கையை' கொலை செய்து... 'தலைமறைவான' அண்ணன்!
- ‘டாஸ்மாக்’ திறப்புக்கு தடை விதித்ததால் ஆத்திரம்?.. மர்மநபர்கள் செய்த ‘அட்டூழியம்’.. மதுரையில் அதிர்ச்சி..!
- போதையில் 'வீட்டிற்கு' வந்த தந்தை... மகள் செய்த 'விபரீத' காரியம்!
- ஊரடங்கால் கிராம மக்கள் பாதிப்பு!.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்...' 'இன்று (மே.4) காலை 8.30க்கு தொடக்கம்...' 'எதில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது தெரியுமா?...'
- 'முதியவர் கொலையில்' தெரியவந்த அதிரவைக்கும் 'உண்மைகள்'!.. 'மகன் மற்றும் மருமகளின்' நாடகம் 'அம்பலம்'!
- ‘தொப்புள்கொடி ஈரம் கூட காயல’.. ‘இத பண்ண எப்டி மனசு வந்தச்சோ’.. வைகை ஆற்றின் நடுவே நடந்த கொடூரம்..!
- மருந்து வாங்க போனவருக்கு ‘இப்டியா’ நடக்கணும்..! நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- 'டிக்-டாக்கில் ஒரு தலைக்காதல்!'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் பரபரப்பு!
- ‘கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள் கூட்டம்’.. மூடப்பட்ட மதுரை கலெக்டர் அலுவலக நுழைவு வாசல்.. காரணம் என்ன?