'சார்...' 'ஸ்கூல் பசங்க எல்லாம் சைக்கிள்ள' 'முந்திட்டு போறாங்க...' 'ஊர்ந்து' செல்லும் 'அரசு பேருந்துகள்...' 'இப்படி கூட ஒரு காரணமா?...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு போக்குவரத்து, கோவை கோட்டம், ஈரோடு மண்டலத்தில், 1,300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் 1 லிட்டர் டீசலில், 5.5 கி.மீ., துாரம் இயக்கி வந்த நிலையில், தற்போது 6 கி.மீ., தூரத்திற்கு இயக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, போக்குவரத்து துணை பொது மேலாளர், பணிமனை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "ஜூன் முதல், ஈரோடு மண்டல பேருந்துகளின் வருமானத்தை அதிகரிக்க, 1 லிட்டர் டீசலுக்கு, 6 கி.மீ., துாரம் இயக்க வேண்டும்.
இதில் குறைவு ஏற்பட்டால், அந்தந்த பணிமனை கிளை மேலாளர், துணை கிளை மேலாளர், எரிபொருள் நிரப்பும் பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் டீசலுக்கு, அவர்களே கட்டணத்தை செலுத்த வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டீசலை சேமிக்க, பேருந்துகளை, டிரைவர்கள் குறைந்த வேகத்தில் ஓட்டி வருகின்றனர். இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். ஈரோடு மண்டல உத்தரவை மேற்கோள் காட்டி, பிற மண்டல அதிகாரிகளும், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க நிர்பந்தம் செய்வதால், அரசு பேருந்துகள் ஒரு வாரமாக ஆமை வேகத்திலேயே இயக்கப்படுகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ருத்திர ஆட்டத்தை தொடங்கிய 'அம்பன்'... 'ரிவர்ஸ் கியர் இல்லாமல் இழுத்துச் சென்ற சூறாவளி'... கதிகலங்க வைக்கும் வீடியோ!
- 'வீட்டிலிருந்தே வேலை...' 'பட்டையை கிளப்பும் ஆஃபர்...' 'ஊரடங்கிற்கு பிறகும்...' 'அரசு ஊழியர்களுக்கு' அடிக்கும் 'ஜாக்பாட்...'
- "மொத பஸ்ஸ புடிச்சு ஊருக்கு போயிடனும்னு..." "நெனைச்சவங்களுக்கெல்லாம் தயாராகும் ஆப்பு..." 'இனி' பக்கத்து 'சீட்டுக்கும்' சேத்து 'டிக்கெட்' எடுக்கனும்...
- 'ஓ... இனிமே இப்படித்தான் இருக்கப்போகுதா!?' மாற்றி அமைக்கப்படும் பேருந்து இருக்கைகள்!.. ஊரடங்கு தளர்வுக்கு தயாராகிறதா அரசு?
- 'தமிழக மக்களுக்கு குட் நியூஸ்'... 'ஊரடங்கு முடிந்ததும்'... 'அரசுப் பேருந்துகள் இயக்கம்'... 'முக்கிய விதிமுறைகள் வெளியீடு'!
- ‘நான்காவது தூணை முடக்க வேண்டாம்’... ‘கோவை விவகாரத்தில்’... ‘கமல்ஹாசன் ட்விட்டரில் வலியுறுத்தல்’!
- ‘கொரோனா பாதிப்பால் எடுக்கப்பட்ட முடிவு’... ‘மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி’... வெளிவந்த தகவல்!
- கொரோனா எதிரொலி!.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!.. முழு விவரம் உள்ளே
- கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள்!.. உச்சகட்ட கோபத்தில் அரசு மருத்துவர்கள் சங்கம்... அடுத்தடுத்த அதிரடி முடிவு!.. என்ன காரணம்?
- 'கொரோனா தொற்று இல்லாதப் பேருந்து'... 'முதன்முறையாக தொடங்கிய மாநிலம்!