'தீபாவளிக்காக கொண்டு போன பட்டாசு'...'திடீர்னு வந்த புகை'...'இருவரின் தலை துண்டான பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளிக்காக கொண்டு சென்ற பட்டாசுகள் வெடித்து சிதறியதில், இரண்டு பேர் தலை துண்டாகி இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பட்டாசு ஏற்றிய வேன் ஒன்று பாண்டிச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் - செஞ்சி சாலையில், வடவானுர் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென புகை வந்தது. இதையடுத்து வேனை நிறுத்திய ஓட்டுநர், கீழே இறங்கி சென்று ஏன் புகை வருகிறது என பார்த்தார். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த கிராம மக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளார்கள். அப்போது பட்டாசுகள் வெடித்ததில் இரண்டு பேர் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதையடுத்து அங்கு வந்த தீயணைக்கும் வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
இதனிடையே இறந்தவர்களின் உடல்கள் சிதைந்து இருப்பதால் அவர்கள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பிறந்தநாள் கொண்டாடிவிட்டு’... ‘கல்லூரி நண்பர்கள் திரும்பியபோது’... ‘சென்னையில் நடந்த கோர விபத்து’!
- ‘நடுரோட்டில் போலீஸ் தடுத்தும்’... ‘இளைஞருக்கு நேர்ந்த பதைபதைப்பு காட்சிகள்’!
- ‘ரயில் தண்டவாளத்தை கடந்தபோது’... ‘மோசமாக அடிபட்ட யானை உயிரிழப்பு’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்'!
- 'உங்க கணவர் 8-வது மாடியில் இருந்து...'... 'மனைவி எடுத்த விபரீத முடிவு'.. சோகத்தில் ஏசி மெக்கானிக் குடும்பம்!
- ‘மினி லாரியும் பைக்கும்’.. ‘நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில்’.. ‘மாணவர்களுக்கு நடந்த பரிதாபம்’..
- 'எதிரே வந்த ரயில்'...'தண்டவாளத்தை கடந்த யானை'...ஒரே செகண்ட் தான்'...மனதை ரணமாக்கும் வீடியோ!
- ‘திடீரென வெடித்த டயரால்’.. ‘ஜீப் மீது வேன்’.. ‘நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து’..
- சட்டவிரோத கடத்தல்...'தங்கச்சுரங்கம்' இடிந்து விழுந்து 30 பேர் பலி!
- 'திடீரென திரும்பிய பைக்'... நிலைத்தடுமாறி கவிழ்ந்த லாரி... நொடியில் நடந்த பரிதாபம்!
- ‘விபத்தென நினைத்த வழக்கில் திடீர் திருப்பம்’.. ‘6 மாத பிளான் என’.. ‘மனைவியும், ஆண் நண்பரும் வாக்குமூலம்’..