முதல்வர் கைகளால் "தகைசால் தமிழர் விருது" பெற்ற தோழர் நல்லகண்ணு.! விருது பெற்ற கையோடு சுதந்திர தின மேடையிலேயே கொடுத்த சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக, ‘தகைசால் தமிழர்’ என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ‘தகைசால் தமிழர்’ விருது பெறும் நபர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சரின் கையால் வழங்கப்படும்.
கடந்த ஆண்டிற்கான‘தகைசால் தமிழர்’ விருதை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சங்கரய்யா பெற்றார். அரசு வழங்கிய ரூ.10 லட்சத்தை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசுக்கே வழங்குவதாக சங்கரய்யா அறிவித்தார். இந்நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது. 10 லட்ச ரூபாய் விருது பெற்ற மேடையிலேயே, அத்துடன் ரூ.5000 சேர்த்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்து 5 ஆயிரமாக திருப்பி வழங்கியதற்காக "தகைசால் தமிழர்" நல்லகண்ணுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
"76-ஆவது விடுதலை நாள் விழா.." அரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 'சர்ப்ரைஸ்'!!
தொடர்புடைய செய்திகள்
- "நான் Soft முதல்வர் என யாரும் நினைக்க வேண்டாம்".. ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி.. முழு விபரம்..!
- Chess Olympiad 2022 நிறைவு நாள்.. சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து பார்த்த முதல்வர்..
- "சென்னை நினைவுகள்.. மறக்க முடியாத பயணம்".. நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..!
- ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம் “செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டிகள்”
- "யாரும் காலைல சாப்பிடாம இருக்க கூடாது".. பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அன்புக்கட்டளை..!
- அரசு பள்ளிகளில் இனி காலை சிற்றுண்டி..அரசாணை வெளியீடு.. அடேங்கப்பா மெனு செம்மையா இருக்கே..!
- "உடம்ப பாத்துக்கோங்க.." கலவரத்தில் காயம் அடைந்த காவலர்.. உடனடியாக பறந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் Call..
- 'English-ல் சரளமாக பேசிய முதல்வர் ஸ்டாலின்'.. அடுத்தடுத்து வச்ச கோரிக்கைகள்.. வியந்த பிரதமர்..!
- துபாய் EXPO-வில் முதல்வர் ஸ்டாலின்... முதல் வெளிநாட்டு பயணம் துபாய் மக்களிடம் பேசிய மாஸான பேச்சு..!
- "நாடு முழுவதும் இந்த திட்டம் சட்டமாகணும்" திருமண விழாவில் விருப்பத்தை உடைத்து சொன்ன முதல்வர்..!