தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 பெண் உட்பட 5 ஆக உயர்வு! உயிரிழந்தவர்களின் விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 411 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து நிற்கிறது.
முன்னதாக மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் 25.03.2020 அன்று உயிரிழந்தார். நேற்றைய தினம் விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது ஆணும், தேனியில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண்ணும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் துபாயில் இருந்து தமிழகம் வந்த 71 வயது மதிக்கத்தக்க முதியவர் 02.04.2020 அன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே 11.45 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட தோடு அவற்றை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் உயிரிழந்த இந்த முதியவர் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்தவர் என்றும், இவர் துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதாகவும் தெரிகிறது.
இதேபோல் சென்னையைச் சேர்ந்த 60 வயது ஆண் நபர் ஒருவர் 01.04.2020 அன்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை 1.45 மணிக்கு உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீட்டு வாசல்ல நின்னு தான் என் குழந்தைய பார்த்தேன்!'... கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க... 2 வாரங்களாக குடும்பத்தை பிரிந்த மருத்துவர்!... மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- ‘சென்னை மக்களுக்காக’... ‘அம்மா உணவகம், சூப்பர் மார்க்கெட் முதல்’... ‘அவசர தேவைகளுக்காக மாகராட்சியின்’... ‘அசத்தலான சிறப்பு இணையதளம்’
- கணவருக்கு வந்த 'போன்'... 'கஷாயத்தில்' மயக்க மருந்து... 'நாடகமாடிய' மனைவி 'கடைசியில்' கொடுத்த 'ஷாக்'... 'மிரளவைக்கும்' சம்பவம்...
- ‘இந்த 2 விமானங்களில்'... ‘இந்த தேதியில் சென்னை வந்தவர்கள்’... ‘கண்டிப்பா இதை செய்துகொள்ளுங்கள்’... ‘சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’!
- 'தமிழகத்தில்' இன்று புதிதாக '74 பேருக்கு' கொரோனா... '485 ஆக' உயர்ந்த மொத்த 'பாதிப்பு'... சுகாதாரத்துறை செயலாளர் 'தகவல்'...
- '9 நாட்களில்' கட்டி முடிக்கப்பட்ட 'மருத்துவமனை'... '4 ஆயிரம் படுக்கை வசதிகள்...' 'வெண்டிலேட்டர்கள்...' 'பிரிட்டிஷ்' அரசின் வியக்க வைக்கும் 'சாதனை...'
- '48 மணி நேரத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்...' 'ஏற்கெனவே மருந்து இருக்கிறது...' 'ஆஸ்திரேலிய' மருத்துவர்களின் வியக்க வைக்கும் 'ஆய்வு முடிவு...'
- 'நாளை' முதல்... 'அத்தியாவசிய' பொருட்கள் 'விற்பனை' நேரம் 'குறைப்பு'... முதலமைச்சர் பழனிசாமி 'அறிவிப்பு'...
- 'பேபிக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதா'... 'ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த தம்பதி'...காத்திருந்த அதிசயம்!
- "நான் கொரோனாவை விட பயங்கரமானவன்" கைகளில் 'தடியுடன்' இருந்த 'போலீசார்' முன்னிலையில்... 'வீரவசனம்' பேசிய 'இளைஞருக்கு' நேர்ந்த 'பயங்கர பின்விளைவுகள்...'