“நாங்க உங்களுக்காக வேலையில் இருக்கோம்.. நீங்க எங்களுக்காக”.. இதயத்தை நெகிழவைத்த பிரபல கலைஞரின் ‘செயல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக், கொரோனா விழிப்புணர்வுக்காக உருவாக்கிய மணல் சிற்பம் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசுக்கு பல ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவைப் பொருத்தவரை 166-ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொது இடங்களில் கூடுவதும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைப்பதும் வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டது.

மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா எளிதாக தொற்றிவிடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாகவும், முடிந்தவரை வெளியூர் பயணங்களை தவிர்த்துவிட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தால் நல்லது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த சூழலில்தான் பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் ஒரு விழிப்புணர்வு சிற்பத்தை உருவாக்கியுள்ளார். அதில் ‘கொரோனாவை எதிர்த்து உழைக்கும் டாக்டர்களும், செவிலியர்களும் உங்களுக்காக வேலையில் இருக்கிறோம், பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்காக வீட்டிற்குள்ளேயே இருங்கள்’ என்கிற

வாசகம் இடம் பெற்றுள்ளது.

 

CORONAVIRUSUPDATE, CORONAVIRUSINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்