'போன வருஷம் போல நிலைமை மாறுதா'?... 'சென்னையில் 181 கட்டுப்பாட்டு பகுதிகள்'... 'யாரும் வர முடியாது'... அதிரடி கட்டுப்பாடுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து யாரும் வெளியில் வர முடியாது.

சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துக் கொண்டே சென்றது. உயிரிழப்புகளும் அதிகரித்தன. கடந்த 11-ந்தேதி அன்று தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டி இருந்தது. அன்று ஒரே நாளில் 92 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 100-ஐ தொட்டு விடுமோ என்று அஞ்சப்பட்டது.

ஆனால் அதன்பிறகு கொரோனா உயிரிழப்புகள் சென்னையில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 12-ந் தேதி அன்று 89 பேர் பலியாகி இருந்த நிலையில் 13-ந்தேதி 88 பேரும், 14-ந் தேதி 74 பேரும் உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒரே நாளில் உயிரிழப்பு அதிரடியாகக் குறைந்துள்ளது. இது சென்னை மக்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் வி‌ஷயமாகவே உள்ளது.

அதே நேரத்தில் அதிகாரிகளும் கொரோனா உயிரிழப்புகளை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 181 நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளைக் கண்காணித்தும் தனிமைப்படுத்துதலிலிருந்து வெளியில் வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே போன்ற முறை பின்பற்றத்தப்பட்டது. அதேபோன்று தற்போது நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து யாரும் வெளியில் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்குரிய அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எனச் சென்னை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்