'கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை குறைந்தது'... ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சொன்ன முக்கிய காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோயிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் சற்று குறைந்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ''கொரோனா நோயிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் குறைந்ததற்கு முக்கிய காரணம் மருத்துவ வல்லுநர்களுடன் இணைந்து சிகிச்சை வழிமுறைகளை மாற்றி நிர்ணயித்ததுதான். முன்பெல்லாம் பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மூன்று நாட்கள் தொடர் காய்ச்சல் இல்லை என்றால் கொரோனா தொற்றாளர்களை டிஸ்சார்ஜ் செய்து கொண்டிருந்தோம்.
தற்போது டிஸ்சார்ஜ் செய்த பிறகும் கூட, சில தொற்றாளர்களுக்குச் சிரமங்கள் இருந்தால், ஓரிரு நாட்கள் தேவைப்பட்டால் கோவிட் கவனிப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால் தான் அவர்களைக் குணமடைந்து வீடு திரும்புவதாகக் காட்டாமல், சிகிச்சையில் இருப்பதாகக் காட்டுவதால்தான் குணம் அடைந்தோர் விகிதம் சற்று குறைந்துள்ளதாகத் தோன்றுகிறது. கொரோனா தொற்று ஏற்படுவோரின் திடீர் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தின் கோவிட் தொற்றுப் பரிசோதனைகளின் எண்ணிக்கை எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை. தற்போது எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுப் பரவல் விகிதம் சற்று அதிகரித்து, அதிலேயே நின்ற பிறகு மெதுவாகக் குறையும் என்பதுதான் தொற்று நோய் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- யாரா இருந்தாலும் ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்...! 'விதிமுறையை மீறிய அம்மா...' 'டூட்டிக்கு சேர்ந்த முதல் நாளே...' - அம்மா மேல ஆக்சன் எடுத்த மகன்...!
- கொரோனாவுக்கு எதிராக களப்பணியாற்றி 'உயிரிழந்த' மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா '25 லட்சம்' ரூபாய் இழப்பீடு...! - தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!
- 'ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு'... 'முக்கிய சிபிஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன்'... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மரணம்!
- முழு ஊரடங்கில் சில ‘தளர்வுகளை’ அறிவித்த தமிழக அரசு.. எதற்கெல்லாம் புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது..?
- 'என்னோட மனசு முழுக்க அங்கேயே தான் இருக்கு'!.. இந்தியா குறித்து... வேதனை தாங்காமல் கெவின் பீட்டர்சன் உருக்கம்!
- கொரோனாவுக்கு எதிரான போரில்... முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!.. மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 'இந்தியாவுக்கு கொரோனா நிதியை வாரி வழங்கிய ட்விட்டர் CEO'... 'ஆனால் அந்த நிதி யாருக்கு'... ட்விஸ்ட் வைத்த ஜேக் ஃபேட்ரிக்!
- 'இந்தியாவுல பரவிட்டு இருக்க கொரோனாவ...' நாங்க 'அந்த லிஸ்ட்'ல வச்சுருக்கோம்...! - உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு...!
- 'மும்பையில் தான் அதிகமா இருக்குன்னு சொன்னோம்'... 'ஆனா குறைந்த கொரோனா பாதிப்பு'... எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?
- கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ‘புதிய’ மைல் கல்.. உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த அமெரிக்கா..!