'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை முதல் 50% பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பேருந்துகள் இயக்கத்திற்கான வழிமுறைகள் குறித்தும் தமிழக அரசு விதிமுறைகள் வெளியிட்டு உள்ளது. அதுகுறித்து கீழே பார்க்கலாம்:-

Advertising
Advertising

* பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநரின் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும்

* ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு ஒரு பாட்டில் கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும்; முகக்கவசம், கையுறை  கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

* குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும்.

* பேருந்தின் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

* பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும்போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில்  பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

* தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும்.

* மண்டலங்களுக்கு உள்ளேயே மட்டுமே பேருந்து இயக்கப்படும்.

* ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும்.

* மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்