கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் எந்தவொரு தளர்வும் இல்லை என்று தமிழக முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல திரு.வி.க.நகரில் 39 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 31 பேருக்கும், அண்ணாநகரில் 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 37 பேரும், தேனாம்பேட்டையில் 38 பேரும், திருவொற்றியூரில் 9 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி, அடையாறில் தலா 7 பேருக்கும், வளசரவாக்கம் பகுதியில் 5 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 5 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும் பாதிப்பு உள்ளது. மணலி, அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
சென்னையில் இதுவரை கொரோனாவால் 303 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கொஞ்ச நேரத்துல வேர்த்துக் கொட்டிருச்சு!".. மருந்து வாங்க போனவர் சடலமாக வீடு திரும்பிய சோகம்!
- 'கோவை பி.எஸ்.ஜியில் என்ஜினியரிங் படிப்பு'... 'இந்திய அமெரிக்கருக்கு 'டிரம்ப்' கொடுத்த சர்ப்ரைஸ்' ... அதிரடி அறிவிப்பு!
- 'வரலாற்றில் ஒரு கருப்பு நாள்'... 'ஆட்டம் கண்ட கச்சா எண்ணெயின் விலை'... உறைந்து போன அமெரிக்க பங்கு சந்தை!
- திடீர்னு எப்டி 'இத்தனை' பேருக்கு கொரோனா வந்துச்சு?... கண்டுபிடிக்க முடியாமல் 'திணறும்' அதிகாரிகள்!
- காய்ச்சல் இருக்கவங்க இனி... 'ஓடவும்' முடியாது ஒளியவும் முடியாது... செம 'ட்ரிக்குடன்' களமிறங்கும் 'சென்னை' போலீஸ்!
- 'அவர்களோட அன்பை மறக்க முடியாது’... ‘திரும்பவும் வருவேன்’... ‘முதியவரின் உணர்வுப்பூர்வமான சம்பவம்’!
- 'சீனாவில்' விசாரணை... 'வுஹானுக்குள்' நுழைய 'அனுமதி' இல்லை... 'முற்றும்' மோதலால் 'பரபரப்பு'...
- 'கோடிகளில்' வருமானம் இருந்தும்... லாக்டவுனை 'சமாளிக்க' முடியாமல்... 'தொழிலதிபர்' செய்யும் காரியம்!...
- ‘இப்போதைக்கு இதெல்லாம் கிடையாது’... ‘இந்திய நிறுவனத்தின் அதிரடி முடிவு’... ‘ஏமாற்றத்திலும், மூன்று ஆறுதலான விஷயங்கள்’!
- இந்த நேரத்தில் 'அலட்சியம்' என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?-அமைச்சர் விஜயபாஸ்கர்!