'காட்டுத்தீ'யாக பரவிய தகவல்... 'வெளிநாடு'களில் இருந்து வந்தவர்களால்... 'திருச்சி' மக்கள் அச்சம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இரவு முழுவதும் அவர்கள் வெளியில் நடமாடிக்கொண்டு இருக்கின்றனர் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காரணமாக உலக நாடுகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு நாடும் பிற நாடுகளில் தங்கியிருக்கும் தங்களது குடிமக்களை விமானங்கள் வழியாக தொடர்ந்து மீட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை சார்ஜாவில் இருந்து 145 பேர் திருச்சி விமான நிலையத்துக்கு  வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அவர்களை 4 குழுக்களாக பிரித்து திருச்சியில் உள்ள தனியார் விடுதிகளில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்கு பின் அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதால் இவ்வாறு தங்க வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள இப்ராஸ் மற்றும் இம்பீரியல் என்ற இரு விடுதிகளில் தலா 30 பேர் எனத் தங்கவைக்கப்பட இருந்தனர். இதையறிந்த காந்தி நகர் பகுதி மக்கள் திரண்டு வந்து அவர்களை இங்கே தங்க வைக்கக்கூடாது. அவர்களால் எங்களுக்கும் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது எனக்கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனுமில்லை என்பதால் வேறு வழியின்றி அவர்கள் அனைவரையும்  ஸ்ரீரங்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் இரவுகளில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். அதனால் எங்களுக்கும் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களை இங்கே தங்க வைக்கக்கூடாது என்று  போராட்டம் நடத்தினோம் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்