கொரோனாவை 'வென்ற' தமிழகத்தின் 'முதல்' மாவட்டம்... மக்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் சற்று அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக நீலகிரி மாவட்டம் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது.

அதிகபட்சமாக இந்த மாவட்டத்தில் டெல்லிக்கு சென்று வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களின் உறவினர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் மொத்தமாக மாநிலத்தில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வசித்துவந்த ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடைசி நபரும் நேற்று கொரோனாவில் இருந்து மீண்டதால் கொரோனாவை வென்ற தமிழகத்தின் முதல் மாவட்டம் என்ற பெயர் நீலகிரி மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. மேலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் வெளியூர்களிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்த 1471 பேரும் வீட்டுக்காவலில் 28 நாட்கள் வைக்கப்பட்டனர். அவர்கள் வெளியில் வரவும் கடுமையான தடை விதிக்கப்பட்டது. அதேபோல மாநில, மாவட்ட எல்லைகளை மூடியது மற்றும் சுற்றுலாத்தலங்களை மூடியது போன்ற நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்