'சென்னை' டூ கரூர்: கொரோனாவுக்கு 'பலியான' மகன்... சரியாக 10 நாட்கள் கழித்து 'தாய்க்கு' நேர்ந்த துயரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகன் இறந்த 10-வது நாளில் தாய்க்கு நேர்ந்த துயரம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவர் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் சென்னையில் இருந்து கரூர் வந்த அவருக்கு காய்ச்சல், சளி இருந்ததால் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் கொரோனா தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 21-ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் 58 வயதான அவர் தாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்-மகன் கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலியாகி இருப்பது கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூரில் இதுவரை 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “கொரோனா 2வது அலை”.. “2020க்குள் மேலும் 340 மில்லியன் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்!”
- தமிழகத்தில் அடுத்தடுத்து 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
- சேலத்தில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா!.. ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- இந்த '14 நாடுகள்' தான் பாதுகாப்பானது... அதனால அவங்களுக்கு 'மட்டும்' தான் அனுமதி... அதிர்ச்சி அளித்த ஐரோப்பிய ஒன்றியம்!
- தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,852 பேர் குணமடைந்துள்ளனர்!.. ஆனால் பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே
- "மூச்சு விட முடியல... என்ன காப்பாத்துங்க!".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்!.. வாசலிலேயே உயிர்பிரிந்த சோகம்!
- கடந்த '24 மணி' நேரத்துல மட்டும்... நாட்டுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'சுகாதாரத்துறை' அமைச்சகம்!
- 2 நாட்களில் 'இறந்து' போன புது மாப்பிள்ளை... உண்மையை 'மறைத்த' பெற்றோரால்... அடுத்தடுத்து '111 பேருக்கு' காத்திருந்த அதிர்ச்சி!
- 'அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா...' 'தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...' - மருத்துவ நிர்வாகம் அறிக்கை...!
- சென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா!.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?