எங்கே பார்த்தாலும் 'டூலெட்' போர்டு தான்... வேகமாக காலியாகும் 'மாநகரம்'... மிச்சமீதி மக்களும் மூட்டை, முடிச்சோடு வெயிட்டிங்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒரு காலத்தில் வீடு கிடைக்க 1 மாதம் வரையில் காத்திருந்த நிலை இன்று அடியோடு மாறிவிட்டது.

கொரோனா காரணமாக உலகம் எங்குமே முடங்கிக்கிடக்க தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநில மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை வாரிவழங்கிய சிங்காரச்சென்னை இன்று பொலிவிழந்து போய் உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் ஆப்ஷனை அளித்ததில் வாடகைக்கு தங்கியிருந்த பேச்சுலர்கள் தொடங்கி, குழந்தை குட்டிகளுடன் இருந்த குடும்பஸ்தர்களும் வீடுகளை காலி செய்து சொந்த ஊர்களுக்கு மூட்டை முடிச்சுடன் சென்று விட்டனர்.

மிச்சம், மீதி இருப்போரும் கூட அரசு இ-பாஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கி இருக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் பொது போக்குவரத்து தொடங்கி விட்டால் அவர்களும் மூட்டை, முடிச்சோடு ஊரைப்பார்த்து போய் விடுவார்கள். எதிர்பாராத இந்த சூழ்நிலையால் வாடகையை நம்பி பேங்கில் லோன் வாங்கி வீடு கட்டியவர்களின் நிலை இன்று மோசமான நிலையில் உள்ளது.

இதனால் தற்போது சென்னை நகரத்தில் எங்கெங்கு நோக்கினும் டூலெட் போர்டுகள் வாசலில் தொங்கியபடி காட்சி அளிக்கின்றன. ஒரு காலத்தில் வீடு வாடகைக்கு எடுக்க ஒரு மாதம் வரை காத்திருந்த சூழ்நிலை மாறி தற்போது பாதி வாடகைக்கு விட்டால் கூட குடியேற ஆள் இல்லாமல் வீட்டு ஓனர்கள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. நிலைமை எப்போது சரியாகி மீண்டும் வாடகை வீடுகளை தேடி மக்கள் அலையும் சூழ்நிலை வரும் என தெரியவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்