கொரோனா கொல்லி 'மைசூர்பா'... ஜஸ்ட் 800 ரூபா தான் 'வைரலான' விளம்பரம்... கடைக்கு சீல்; உரிமமும் ரத்து
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவை ஒழிக்கும் மைசூர்பா என கடந்த சில தினங்களாக ஸ்வீட் கடையொன்றின் விளம்பரம் வெளியானது. அதில், ''ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம்... ஆம் மக்களே இது சின்னியம்பாளையத்திலும் வெள்ளலூரிலும் நிறைவேறியது. கொரோனாவுக்கு எதிரான இந்த மூன்றாம் உலகப்போரில், பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக எங்களது மைசூர்பாவை கொடுக்கத் தயாராக இருக்கிறோம்,'' என அச்சடித்து இருந்தனர்.
இந்த நிலையில் அந்த ஸ்ரீராம் லாலா கடையில் இன்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு, எந்த அனுமதியும் பெறாமல் அவர்கள் இந்த விளம்பரத்தை அச்சடித்து வியாபாரம் செய்தது தெரிய வந்தது. கொரோனா கொல்லி மைசூர்பா, மூலிகை மைசூர்பா என்று வெவ்வேறு பெயர்களில் கிலோ 800 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். மேலும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தகத்தை, திரிபலா, மஞ்சள் தூள், முருங்கையிலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை என சுமார் 19 வகை மூலிகைகளை அதில் கலந்துள்ளனர்.
இதையடுத்து சுமார் 120 கிலோ மைசூர்பாவை கைப்பற்றி அதை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் கடை உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவசர கதியில் பாய் பிரண்ட் வீட்டிற்கு போன பெண்'... 'வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி'!
- 'இப்போ எங்க நாட்டுல யாருக்கும் கொரோனா கிடையாது...' 'கடைசி நோயாளியையும் குணப்படுத்தி அனுப்பியாச்சு...' கெத்து காட்டிய நாடு...!
- 'தமிழக அமைச்சருக்கு கொரோனா'... 'உடல்நிலை சீராக உள்ளது'... மருத்துவமனையில் சிகிச்சை!
- “இது ஆவறது இல்ல!”... ‘விடிஞ்சி எழுந்ததும் இப்படி ஒரு முடிவை எடுத்து’.. ‘ஷாக் கொடுத்த டிரம்ப்’! கொரோனா இன்னும் என்னலாம் செய்ய போகுதோ!
- 'பசங்களா ரெடியா இருங்க'... 'அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வி'... 'இந்த தேதி முதல் ஆரம்பம்'... அமைச்சர் செங்கோட்டையன்!
- “மதுபான விடுதி, இந்திய உணவகம் உட்பட 3 இடங்கள் க்ளோஸ்!”.. “யாருயா இந்த super spreader ? எனக்கே பாக்கணும் போல இருக்கு!”
- ஊழியரைக் கடத்தி 'அடைத்து' வைத்து... அந்தரங்க இடத்தில் 'சானிடைசர்' தெளித்து... 'சித்திரவதை' செய்த ஓனர்... ஷாக்கான போலீஸ்!
- மதுரையில் மேலும் 334 பேருக்கு கொரோனா!.. சென்னையில் குறைகிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. வெகுவாகக் குறைந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!
- 100 ஆண்டுகளில் 'முதல்முறையாக' மூடப்பட்ட எல்லைகள்... 2-ம் அலையின் 'தொடக்கத்தால்' அதிரடி முடிவெடுத்த நாடு!