மகனின் 'திருமணத்தில்' மயங்கி விழுந்து 'உயிரிழந்த' தந்தை... பரிசோதனையில் 'ஒட்டுமொத்த' குடும்பத்துக்கும் காத்திருந்த 'பேரதிர்ச்சி'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகனின் திருமணத்தில் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertising
Advertising

சென்னையை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவரின் மகனுக்கும் கூடங்குளத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்வதாக பேசி நிச்சயிக்கப்பட்டு, நேற்று முன்தினம் திருமணம் கூடங்குளத்தில் நடைபெற்றது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமகனின் தந்தை மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். இதையடுத்து அவருக்கு கொரோனா உள்ளதா? என்பதை கண்டறிய, அவரின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவு நேற்று மாலை வெளியானது. அதில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து முதியவரின் உடலை கொண்டு வந்தபோது உடனிருந்த போலீசார் உட்பட 8 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். சுமார் 50 பேர் வரை திருமணத்தில் கலந்து கொண்டதால் அவர்கள் யார்? யார்? என்பதை கண்டறியும் முயற்சியில் தற்போது சுகாதாரத்துறை  அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்