அடுத்த கோயம்பேடாக மாறும் 'பரவை'... அனைவரையும் 'தனிமைப்படுத்தி' கண்காணிக்க முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அடுத்த கோயம்பேடாக மாறி வருவதால் தனிமைப்படுத்தி கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையின் கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியதை அடுத்து சந்தையை அதிகாரிகள் இடமாற்றம் செய்தனர். இதேபோல தற்போது மதுரை பரவை மார்க்கெட்டும் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.

சென்னை கோயம்பேடு போன்றே பரவை மார்க்கெட்டிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 15-ம் தேதி மார்க்கெட் மூடப்பட்டு நான்கு வெவ்வேறு இடங்களில் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பரவை காய்கறி சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பணியாற்றியவர்கள் விவரம் பெறப்பட்டு 1009 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 பேருக்கு தீவிர தொற்று இருப்பது தெரியவந்தது.  பரவை சந்தையில் பணியாற்றியவர்கள் உடன் அடுத்தடுத்து தொடர்பில் இருந்தவர்கள் என 2000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் வீட்டில் தனிமைப்படுத்த சுகாதாரத்துறை தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பின்னணியில் மதுரை பரவை மார்க்கெட்டின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்