கொரோனா டெஸ்ட் முடிச்சிட்டு 'பஸ்'ல டிராவல்... செல்போனில் வந்த தகவலால்... ஓட்டம் பிடித்த சக 'பயணிகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து அரசு பேருந்து ஒன்று வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து காடாம்புலியூர் வந்த போது நெய்வேலி செல்ல வேண்டி ஒரு தம்பதியர் பேருந்தில் ஏறினர்.
பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், அந்த தம்பதியருக்கு சுகாதாரத்துறையினரிடம் இருந்து அழைப்பு வந்தது. போனில் பேசிய அதிகாரி ஒருவர், நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அவர்களும் பேருந்தில் இருக்கும் தகவலை தெரிவிக்க செல்போனை உடனடியாக நடத்துனரிடம் கொடுக்க வேண்டி கூறியுள்ளனர்.
இதனையடுத்து நடத்துனரிடம் பேசிய அதிகாரிகள், அந்த தம்பதியருக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது. அதனால் அவர்களை அங்கேயே இறக்கி விட்டுச் செல்லுங்கள், ஆம்புலன்ஸ் வந்து அவர்களை ஏற்றிச் சென்று விடும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை கூறி அந்த தம்பதியரை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட அடுத்த நொடி, பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் பீதியில் பேருந்தை விட்டு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பேருந்து ஓட்டுநர், இதுகுறித்து வடலூர் பணிமனைக்கு தகவல் தெரிவித்தார். அங்குள்ளவர்கள் உஷார் நிலையில் இருக்க பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வாசலில் வைத்தே அந்த தம்பதியர் அமர்ந்த இருக்கை, மற்ற இருக்கை உட்பட பேருந்து முழுவதும் கிருமிநாசினி கொண்டு நன்றாக கழுவப்பட்டு பின் பணிமனைக்குள் கொண்டு செல்லப்பட்டது.
பொதுவாக, கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் அதன் முடிவு வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியும் சிலர் இது போன்று எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் வெளியே சுற்றி மற்றவர்களுக்கும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பீதியை உருவாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "37 ஆயிரம் கோடி இழப்பா?".. 'ஐ.டி நிறுவனங்களின் முடிவுதான் காரணமா?'.. புலம்பும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள்!
- திருச்சியில் திடீரென்று வேகமெடுத்த கொரோனா!.. மதுரையில் இன்று மட்டும் 157 பேர் பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- "ஒரே நாளில் 37 பேர் பலி!".. இன்று 'தமிழகத்தில்' கொரோனா பாதித்தவர்கள் 'முழு விபரம்!'!
- 'சென்னையில் மட்டுமா? இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'!.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'!
- "பூமி தாங்காது டா... விட்ருங்க டா!".. சீனாவில் தொடங்கியது நாய்கறி சந்தை!.. அதிர்ச்சியில் உறைந்த விலங்கின ஆர்வலர்கள்!
- 'கொரோனா பரவுது... அண்ணாவும், எம்.ஜி.ஆரும் மாஸ்க் போடாம நிக்குறாங்க'!?.. தலைவர்கள் சிலைக்கு 'மாஸ்க்' அணிவிப்பு!
- "வொர்க் ஃப்ரம் ஹோம் கேள்விப்பட்ருப்பீங்க!".. 'இது வேற லெவல்!'.. இந்திய ஊழியர்களுக்கும் அடித்த ஜாக்பாட்!
- 'அம்மாவோட மருத்துவ செலவுக்காக...' கொரோனாவால இறந்து போனவங்க உடல்களை தகனம் செய்யும் மாணவன்...!
- 'சென்னையில் வீடுகளுக்குள் படையெடுக்கும் வண்டுகள்'... 'அவதிப்படும் பொதுமக்கள்'... என்ன காரணம்?
- "3.2 லட்சம் பயனாளர்கள்.. வேலைக்கு வேலையும் ஆச்சு.. கல்விக்கு கல்வியும் ஆச்சு!".. நெகிழவைத்த இன்போசிஸ்!