பைக்கில் வந்த ஜோடி.. சென்டர் மீடியனில் மோதி சோகம்.. இளைஞர் பலி, இளம் பெண் கவலைக்கிடம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இரு சக்கர வாகனத்தில் நெடுஞ்சாலையில் பயணித்த இளைஞர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Advertising
>
Advertising

போலிஸ் ஆக விரும்பிய நவீன்

கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் மாணிக்கம் மற்றும் ரேவதி. இவரின் மகன் நவீன்குமார். உயிர்வேதியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் போலிஸ் வேலையில் சேர்வதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் பெரம்பலூரில் நடக்க உள்ள கபடி போட்டியில் கலந்துகொள்ள செல்வதாக தனது தாயிடம் சொல்லிவிட்டு நேற்று இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளார்.

தோழியை பார்க்க சென்ற நவீன்

ஆனால் கபடிப்போட்டிக்கு சென்ற நவீன் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தன்னுடைய தோழி ஒருவரை சந்தித்துள்ளார். அங்கிருந்து இருவரும்  அவுட்டிங் சென்றுள்ளனர். அவுட்டிங் சென்ற போது தேவையூர் என்ற பகுதிக்கு அருகில் உள்ள தம்பை கிராம நெடுஞ்சாலை பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக நவீன் ஓட்டி வந்த பைக் சாலையின் நடுவில் இருந்த செண்டர் மீடியனில் மோதியுள்ளது.

விபத்தில் பலியான நவீன்

இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட நவீன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவரின் பின்னால் அமர்ந்திருந்த அந்த பெண்ணுக்கும் அடிபட்டு மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இந்த விபத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் நெடுஞ்சாலை போலிசாரின் உதவியோடு அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் உயிரிழந்த நவீனின் உடலை அரசுப் பொதுமருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட்

இந்த விபத்தின் போது இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த நவீன் ஹெல்மெட் அணியவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் காயங்களோடு உயிர்பிழைத்திருக்க வாய்ப்புண்டு. சமீபகாலங்களில் இரு சக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் அதிகமும் ஹெல்மெட் அணியாததால் நிகழ்பவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோரின் நிலை

இந்த விபத்தில் நவீன் உயிரிழந்தது பற்றிய தகவல் சொல்லப்பட்ட போது அவரின் பெற்றோர் இருவரும் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். நவீனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரின் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரின் தாயார் கதறி அழுதது பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீர் வர வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

TAMILNADU, ACCIDENT, KALLAKURICHI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்