‘விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தம்பதி..’ களத்தில் இறங்கிய ‘அமைச்சரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..’
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டையில் விபத்தில் காயமடைந்த தம்பதிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் திரும்பி சென்னை செல்வதற்காக விமான நிலையத்துக்கு பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது கீரனூர் அருகே சாலை விபத்தில் சிக்கி ஒரு தம்பதி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர். அதில் கணவருக்கு கையில் மட்டும் காயம் ஏற்பட, மனைவிக்கு மூக்கிலிருந்து இரத்தம் வந்துகொண்டே இருந்துள்ளது.
இதைப் பார்த்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக காரை நிறுத்தி இறங்கிச் சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளார். பின்னர் 108 ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் தனது பாதுகாப்பு வாகனத்திலேயே அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்து உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். அமைச்சரின் செயலுக்கு அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அதிவேகத்தில் வந்த கார்’... ‘அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்’... ‘தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்'!
- ‘எதிரே வந்த அரசுப் பேருந்து’... ‘நேருக்கு நேர் மோதிய கண்டெய்னர் லாரி’... ‘தீப்பிடித்து எரிந்து கோர விபத்து’!
- 'பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்'...'ஆற்றில் கவிழ்ந்த பேருந்து'... கதறி துடித்த பயணிகள்!
- 'பேருந்துக்கு நெருக்கமாக சென்ற பெண்...'சென்னையில் நடந்த கோர விபத்து'... 'நெஞ்சை பிழியும் வீடியோ'!
- 'அத்திவரதரை தரிசிக்க'... 'ஆசையாக சென்ற குடும்பம்'... 'நடுவழியில் நிகழ்ந்த கோர சம்பவம்'!
- ‘அதிரடி கிளப்பிய எடப்பாடியார்..!’ அடுத்த நடவடிக்கை என்ன..? ‘அதிர்ந்து போயிருக்கும் அரசியல் வட்டாரம்..!’
- லாரியும், காரும் நேருக்குநேர் மோதி கோரவிபத்து..! தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் 4 பேர் பலியான சோகம்..!
- அசுர வேகத்தில் வந்த ‘7 வாகனங்கள்’.. ‘நொடியில்’ நடந்த கோர விபத்தில் 4 பேர் பலி..
- ‘மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து’.. ‘டிரைவர் எடுத்து துரித முடிவு’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘சாலையைக் கடக்கும் போது நடந்த விபரீதம்’.. பைக் மீது மோதிய தனியார் பேருந்து.. 2 பேர் பலியான பரிதாபம்..!