‘இரக்கமின்றி பிள்ளைகள் செய்த செயல்’! ‘பெற்றோர்கள் மர்மான முறையில் மரணம்’!.. பதற வைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிள்ளைகளால் கைவிடப்பட்டு மயானத்தில் தங்கியிருந்த வயதான தம்பதி மர்மமான முறையில் தீயில் கருகி இறந்ததுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கீழ்கொடுங்கலூர் கிராமத்தை சேர்ந்த அப்பாவு - அலமேலு தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆனநிலையில் அவர்கள் அப்பா மற்றும் அம்மாவிற்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம், காலி மனைகள், வீடு என்று அனைத்து சொத்துகளையும் தங்கள் பிள்ளைகளுக்கு எழுதி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பிள்ளைகள் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு தங்களது பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிள்ளைகளால் விரட்டப்பட்ட 95 வயதான அப்பாவும் 90 வயதான அலமேலுவும் தங்க இடமின்றி அவ்வூர் மயானத்திலுள்ள காரிய மேடையில் அநாதைகளாக கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், வழிப்போக்கர்களிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்த இருவரும் காலை மர்மமான முறையில் அந்த மயான மேடையிலேயே எரிந்து கருகிய நிலையில் கிடந்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்ட போலீசார், கொலையா, விபத்தா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 5 ஏக்கருக்கு மேல் நிலம், காலி மனைகள், சொந்த வீடு, ஏழு பிள்ளைகள் என அத்தனையும் இருந்தும் ஆதரவின்றி மயானத்தில் தங்கி, பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த தம்பதியின் கொடூரமான மர்ம மரணம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அலட்சியமாக தொங்கவிடப்பட்ட கேபிள் ஒயர்'... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'!
- 'ரம்மி' விளையாடி,விளையாடி இப்படி ஆகி போச்சே'... 'தம்பதியருக்கு' நிகழ்ந்த துயரம்!
- ‘சிறுவனுக்கு எமனாக மாறிய ராட்டினம்’!.. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்!
- 'டி.வி. பார்த்த சிறுமியை அடித்து, வெயிலில் நிற்க வைத்த கொடூரம் '... '5 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்'!
- 'மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து'... '6 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி'!
- “இப்டியுமா மனிதர்கள் இருப்பாங்க”!.. ‘இன்ஸ்டாகிராமால் விபரீத முடிவு எடுத்த பெண்’!.. பதற வைக்கும் சம்பவம்!
- 'தனியார் பேருந்தும் வேனும்' நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 15 பேர் பலி!
- 'மரணத்திலும் இணை பிரியாத தம்பதி'... 'நெஞ்சை' உருக்கும் சம்பவம்!
- “அதோட இத சம்பந்தபடுத்தாதீங்க”! நோயாளிகள் உயிரிழப்பு குறித்து பதிலளிக்கும் மருத்துமனை டீன்!
- “இவ்வளவு ஆத்திரம் தேவையா”?...தன்னை கொத்திய பாம்பை என்ன செய்தார் தெரியுமா! கோபத்தால் சோகத்தில் முடிந்த சம்பவம்!