‘சென்னை ECR ரோட்டில் விபத்துக்குள்ளான கார்’.. கல்யாணத்துக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழ்மாறன்-சுவேதா தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாமல்லப்புரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் கார் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த ஜெனரேட்டர் வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த தமிழ்மாறன்-சுவாதி தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த இரண்டு குழந்தைகள் உட்பட் 5 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள சென்ற வழியில் கார் விபத்துக்குள்ளாகி கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உள்ளங்கையில் அரிவாள் வெட்டு’.. ‘ஓட ஓட விரட்டிய கொள்ளையர்கள்’ சென்னை பீச்சில் இஞ்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்..!
- ‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- 'ஐஸ்கிரீம் வாங்கச் சென்ற சிறுமிக்கு'... 'ஆசை வார்த்தைக் கூறிய'... கடைக்காரரால் நேர்ந்த சோகம்'!
- ‘17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘திடீரென கேட்ட பயங்கர சத்தம்’... ‘வெடித்து சிதறிய கதவுகள்’... ‘டிவி பார்த்துக் கொண்டு இருந்தபோது’... ‘சென்னையில் நடந்த சோகம்’!
- ‘தாயின் கண்முன்னே'... 'உணவு ஊட்டியபோது'... 'குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்'... ‘பதறித்துடித்த இளம் தம்பதி’!
- ‘ஓடும் ரயிலில் படிக்கட்டில்’... ‘செல்ஃபோன் பார்த்தபடி பயணித்த இளைஞருக்கு’... ‘4 பேரால் நேர்ந்த பயங்கரம்’!
- ‘முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்’...‘ஓராண்டுக்குப் பின்’... 'வசமாக சிக்கிய இளம் தம்பதி’!
- ‘நெஞ்சுவலியால் சாய்ந்த ஓட்டுநர்’.. ‘அடுத்தடுத்து 10 கார்கள் மீது மோதி நின்ற பேருந்து’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- 'விடுமுறையும்' அதுவுமா..இங்கெல்லாம் பவர்கட்..உங்க 'ஏரியா'வும் இருக்கா?