ஒரே வருஷம் தான்.. பணம் டபுள் ஆகிடும்.. நம்பிப்போன பெண்ணிற்கு நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொடுத்த பணத்தை ஒரே வருடத்தில் இரட்டிப்பாக மாற்றித் தருவதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த தம்பதியை கைது செய்திருக்கிறது சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ்.

Advertising
>
Advertising

போதை பொருள்-ன்னு இதையா.. வித்திட்டு இருக்காங்க?.. சென்னை போலீசிடம் வசமாக சிக்கிய 4 பேர்..!

சிவகங்கை அடுத்த  தென்னலி வயல் பகுதியைச் சேர்ந்தவர் முடியாண்டி. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் விஜயலட்சுமி. முனியாண்டி கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டு வசித்து வருகிறார்.

இந்நிலையில், விஜயலட்சுமிக்கு நவ பாரதி என்ற பெண்ணிடம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நவபாரதியின் கணவர் செந்தில்குமார் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக வேலை செய்து  வருகிறார்.

டபுள் பணம்

விஜயலட்சுமியிடம் நெருங்கிப் பழகிய நவபாரதி, தன்னிடம் பணம் கொடுத்தால் ஒரு வருடத்தில் அதனை இரண்டு மடங்காக்கி திருப்பித் தருவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த விஜயலட்சுமி பணத்தினை அதிகரிக்கும் நோக்கில் தன்னிடம் இருந்த கணிசமான தொகையை நவபாரதியிடம் அளித்து இருக்கிறார்.

ஒரு வருடம் ஆன பிறகு பணத்தினை விஜயலட்சுமி கேட்க, சாக்கு சொல்லி ஒவ்வொரு முறையும் நவபாரதி இழுத்தடித்து இருக்கிறார். ஒருகட்டத்தில் விஜயலட்சுமி தனக்கு பணம் வேண்டும் என கோபத்தில் கேட்க, நவ பாரதி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

புகார்

இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவில் விஜயலட்சுமி புகார் அளித்து இருக்கிறார். விசாரணையில் நவபாரதி மற்றும் அவரது கணவர் செந்தில்குமார் ஆகியோரது வங்கி கணக்கிற்கு விஜயலெட்சுமி 1.29 கோடி ரூபாய் பணம் அனுப்பி இருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில் விஜயலெட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நவபாரதி மற்றும் அவரது கணவர் செந்தில்குமாரை சிவகங்கை மாவட்ட குற்ற பிரிவு போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 1.29 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நவபாரதி மற்றும் அவரது கணவர் செந்தில்குமாரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது காவல்துறை.

18 பேருக்கு வலைவீச்சு

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாக சொல்லப்படும் தஞ்சையை சேர்ந்த  ஜெயஸ்ரீ, தேவி கரிகாலன், உமாவதி பிரியங்கா உமாவதி லதா மகேஸ் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர் காவல்துறையினர்.

பணத்தை டபுள் ஆக்கி தருவதாக கூறி மோசடி வேலையில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அச்சோ! ஐரோப்பாவின் ராட்சத அணு உலையில் குண்டு வீசிய ரஷ்யா.. "செர்னோபில்-ல விட 10 மடங்கு".. எச்சரிக்கும் உக்ரைன்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!

COUPLE, ARREST, DOUBLING MONEY, SIVAGANGAI, COUPLE ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்