சோலைவனமாக மாற போகும் சிங்கார சென்னை.. மாநகராட்சி எடுத்த செம முயற்சி.. என்ன தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: சென்னை நகர் சாலைகளில் உள்ள சென்டர் மீடியனில் மரம், செடிகளை நடும் பணிகளை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் சென்னை சிட்டி கொஞ்சம், கொஞ்சமாக சோலைவனமாக மாறி வருகிறது.

Advertising
>
Advertising

இங்க பாருங்க.. இதெல்லாம் வேற லெவல்.. நாட்டுக்கே ஒழுக்கத்தை கற்று கொடுத்த மிசோரம் மக்கள்.. வைரல் போட்டோ!

சென்னை சிட்டி

இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்று சென்னை. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வயிற்று பிழைப்புக்காக, கல்விக்காக சென்னையை சார்ந்து இருப்பவர்கள் ஏராளம். சென்னை பெரு நகரில் வானளாவிய கட்டிடங்கள் பெருக, பெருக இங்கு இருக்கும் மரங்கள்  அழிவை நோக்கி சந்தித்தன. ஒரு காலத்தில் மரங்களாக சோலைவனமாக இருந்த பகுதிகள் எல்லாம் தற்போது கான்கிரிட் காடுகளாக மாறி விட்டன.

சென்னை மாநகராட்சி

ஏற்கனவே கடும் வெப்பத்தின் பிடியில் சென்னை நகரம் சிக்கி தவிக்கும் நிலையில் மரங்களும் கட்டிட கட்டுமானத்திற்காக மரங்களும் அழிக்கப்படுவதால் கூடுதல் வெப்ப அலை சென்னையை தாக்கி வருகிறது. இந்த நிலையில் ஒரு நகரத்திற்கு மரங்கள் எவ்வளவு அவசியம்?என்பதை சென்னை மாநகராட்சி  உணர்ந்துள்ளது.

மரங்களை நடும் பணி

அதாவது சென்னை மாநகர் முழுவதும்  சாலைகளில் உள்ள சென்டர் மீடியனில், காலி இடங்களில் மரங்களை நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது சென்னை மாநகராட்சி. இது தொடர்பாக டுவிட் போட்டுள்ள சென்னை மாநகராட்சி, '' 100 அடி ரோட்டில் உள்ள சிம்ஸ் மையம் முன்பு மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. நகரம் முழுவதும் உள்ள சென்டர் மீடியன்களை மேலும் பசுமையாக்குவதை மாநகராட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. நமக்குநாமே திட்டத்தின் கீழ், ஒரு சமூகம் அல்லது தனியார் துறையினர் எங்களுடன் இணைந்து நகரத்தை பசுமையாக்கவோ அல்லது அழகுபடுத்தவோ முடியும்'' என்று அந்த ட்வீட்டில் கூறியுள்ளது.

பாராட்ட வேண்டிய விஷயம்

சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சி மிகவும் பாராட்ட வேண்டிய ஒரு விஷயமாகும். இப்படி நகரம் முழுவதும் மரங்கள் நடும்போது சென்னைவாசிகள் கடும் வெப்பம் என்னும் நரகத்தில் இருந்து தப்பிக்க முடியும்.  நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூருவை எடுத்துக் கொண்டால் அங்கு மரங்கள் இல்லாத சாலைகளே இருக்காது. இதன் காரணமாக எப்போதும் அங்கு குளிர்ச்சியான கிளைமேட் நிலவும்.

இதேபோல் சென்னையும் குளுகுளுவென மாறுவதற்கு சென்னை மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும். தன்னிகரற்ற சிறப்புகளுடன் சிறந்து விளங்கும் சென்னை மாநகரம் பசுமை  நகரமாக மாற வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாக உள்ளது.

Unknown Number-ல் இருந்து வந்த மெசேஜ்.. ரிப்ளை செய்யாத 'டாக்டர்'.. அடுத்து போட்டோவுடன் இளம் பெண் அனுப்பிய மிரட்டல்.. அடுத்து நடந்தது என்ன?

CHENNAI, CHENNAI CITY, CHENNAI CORPORATION, GREEN CITY, சிங்கார சென்னை, சென்னை நகர் சாலைகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்