'கொரோனா வேகமாக பரவும் நகரங்கள்...' 'அதில் சென்னைக்கு எத்தனாவது இடம்...? உலக அளவிலான ஆய்வு முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்னும் செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் உலகமே ஒன்றாக எதிர்கொள்ளும் பிரச்சனையாக கொரோனா உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 10,992,367 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 524,177 உயிரிழந்த நிலையில் 6,150,658 பேர் கொரோனாவிலிருந்து விடுபெற்று வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரசால் அதிகம் பாதிப்படைந்த நாட்டில் முதலில் இருப்பது வல்லரசு அமெரிக்காவே தான். அதுமட்டும் இல்லாமல் உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நகரங்களில் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் திகழ்கிறது.
அதிர்ச்சியளிக்கும் விதமாக லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு அடுத்தபடியாக சென்னை உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தையும் பரவலையும் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை எடுத்துவந்தாலும் தற்போது இந்தியா உலகளவில் 4வது இடத்தை பெற்றுள்ளது.
மேலும் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்திலும், தமிழகத்தில் சென்னை முதல் இடத்திலும் உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் சுமார் 98,392 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 56,021 பேர் உடல்நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட நகரமாக சென்னை உள்ளது அதற்கடுத்தபடியாக டில்லி, தானே, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கவுகாத்தி பால்கர், மற்றும் ராய்காட் நகரங்கள் உள்ளன.
உலகளவில் லாஸ் ஏஞ்சல்ஸ், சென்னை, சாண்டியாகோ, டில்லி, சா பாலோ, தானே, மியாமி, பியூனஸ் அயர்ஸ், சல்வாடர், லிமா ஆகிய நகரங்கள் கொரோனா அதிகம் பரவும் நகரங்களாக உள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காபி, டீயெல்லாம் 'வேணாம்' இது மட்டும் போதும்... கொரோனாவால் உருவான 'மிகப்பெரிய' மாற்றம்!
- ஆடம்பர திருமணம்... அடுத்த சில நாட்களில் 'புதுமாப்பிள்ளை' மரணம்! - கொரோனா-வால் மொத்த குடும்பத்தின் மீதும் 'கிரிமினல் வழக்கு'! - பரபரப்பு சம்பவம்!
- “கொரோனா பரவுர நேரத்துல.. இத சொன்னதுக்கு எச்சில் துப்புவாங்களா?”.. வைரலான பெண் செய்த காரியம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
- 3 மாதத்தில் 'முதல்' உயிரிழப்பு... 'அதிர்ந்து' போன தமிழக மாவட்டம்!
- தென் மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா!.. மதுரையில் மேலும் 273 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் மேலும் 57 பேர் கொரோனாவுக்கு பலி!.. ஆனால் நல்ல செய்தியும் வந்திருக்கு!.. முழு விவரம் உள்ளே!
- 'சென்னை' டூ கரூர்: கொரோனாவுக்கு 'பலியான' மகன்... சரியாக 10 நாட்கள் கழித்து 'தாய்க்கு' நேர்ந்த துயரம்!
- “கொரோனா 2வது அலை”.. “2020க்குள் மேலும் 340 மில்லியன் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்!”
- தமிழகத்தில் அடுத்தடுத்து 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
- சேலத்தில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா!.. ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?