‘முட்டை, பால், பழரசம், சாத்துக்குடி ஜூஸ்’.. கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் ‘மெனு லிஸ்ட்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்கும் உணவை ஊட்டச்சத்து நிபுணர்கள் மருத்துவமனையில் தயாரித்து வழங்கி வருகின்றனர். அதன்படி காலை 7 மணிக்கு இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை வெந்நீரில் நன்றாக கொதிக்க வைத்து கொடுக்கப்படுகிறது.
காலை 8.30 மணியளவில் 2 இட்லி, சாம்பார், ஆனியன் சட்னி, சம்பா ரவை, கோதுமையால் ஆன உப்புமா, 2 வேக வைத்த முட்டை, பால், பழரசம் ஆகியவையும், காலை 11 மணிக்கு சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை கொதிக்க வைத்து சிறுது உப்பு சேர்த்து கொடுக்கப்படுகிறது.
பகல் 1 மணிக்கு 2 சப்பாத்தி, புதினா சாதம் 1 கப், வேகவைத்த காய்கறிகள், 1 கப் கீரை, பெப்பர் ரசம், உடைத்த கடலை 1 கப் ஆகியவை வழங்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு மிளகுடன் மஞ்சள் கலந்து காய்ச்சிய சுடு தண்ணீர் கொடுக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு பருப்பு வகைகளில் மூக்கு கடலை சுண்டல் 1 கப் வழங்கப்படுகிறது.
இரவு 7 மணிக்கு 2 சப்பாத்தி, ஆனியன் சட்னி, இட்லி அல்ல்து சம்பா ரவா, கோது உப்புமா, 1 முட்டை உள்ளிட்டவை வழங்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் முட்டை, பழரசம் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மிக்க உணவுகள் தொடர்ந்து 3 வேளையும் வழங்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மச்சான் எல்லாரும் வீட்டுக்குள்ள தான் இருப்பாங்க'...'இளைஞர்கள் போட்ட பிளான்'... சென்னையில் பரபரப்பு!
- 'கொரோனா அச்சத்தை பயன்படுத்திய பயங்கரவாதிகள்'...'தற்கொலை படை தாக்குதல்'...27 பேர் பலி!
- 'குணமடைந்தவர்களின் உடலில் தான்... கொரோனாவுக்கான மருந்து உள்ளதா!?'... சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!
- கொரோனா அச்சுறுத்தலால்... மருத்துவமனைக்கு வராமலேயே... நோயாளிகள் சிகிச்சை பெற எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி முடிவு!
- ஒரே நாளில் 683 பேர்... '7 ஆயிரத்தை' தாண்டிய உயிரிழப்பு... குவியும் 'சவப்பெட்டிகளால்' திணறும் இத்தாலி!
- உலகளவில் '21 ஆயிரத்தை' நெருங்கிய உயிரிழப்பு... கொரோனாவால் அதிகம் 'பாதிக்கப்பட்ட' நாடுகள் இதுதான்!
- கருப்பு தினம்: கொரோனா 'உயிரிழப்பில்'... சீனாவை முந்தி இத்தாலியைத் 'துரத்தும்' நாடு!
- கொரோனாவை 'தடுக்க' உதவுறோம்... ஆனா 'அமெரிக்கா' மாதிரி நீங்களும் ... இந்தியாவுக்கு 'ரெக்வஸ்ட்' விடுத்த சீனா... எதுக்குன்னு பாருங்க?
- 'கடினமான சூழ்நிலையில் இருந்து'.... '2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து சேவை'... 'விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்’... மகிழ்ச்சியில் பயணிகள்!
- 'கொரோனாவை' கட்டுக்குள் கொண்டுவர... '123 ஆண்டுகள்' பழமையான சட்டம்... எதெல்லாம் 'செய்யக்கூடாது' தெரியுமா?