‘கொரோனா அச்சுறுத்தல்’!.. ‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை’.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோயம்பேடு மார்க்கெட் வரும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 22ம் தேதி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களே ஊரடங்கு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும், அன்றைய தினம் மக்கள் யாரும் அத்தியாவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் வரும் ஞாயிற்றுகிழமை (22.03.2020) கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என வியாபாரிகள் அறிவுறுத்தியுள்ளது. சுய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளதால் அதனை ஏற்று கோயம்பேடு மார்கெட்டுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மருத்துவமனைகள் வழக்கம்போல இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CORONAVIRUSUPDATE, COVID, CHENNAI, KOYAMBEDUMARKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்