300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் யாருக்குமே ‘கொரோனா’ பாதிப்பு இல்லை.. தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த மாவட்டம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 300-க்கும் அதிகமான கிராமங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

அந்த வகையில், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மகளிர் சுய உதவிக்குழு மூலம் கிராமங்களில், காய்ச்சல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊரடங்களில் மொத்தம் 4 லட்சத்து 90 வீடுகள் உள்ளன. இம்மாவட்டத்தில் கடந்த வாரம் வரை 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் 300-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 90 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இந்த கிராம மக்களுக்கு தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் யாரும் நோய் தொற்றால் பாதிக்கப்படாதது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்