குடும்ப அட்டைதாரர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டட மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ‘நிவாரணம்’... முதலமைச்சர் ‘அறிவிப்பு’... விவரங்கள் உள்ளே...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டப்பேரவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சமூக பரவலைத் தடுப்பதற்காக இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி அதிகாலை வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால், தமிழக முதலமைச்சர் பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ 3250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 வழங்கப்படும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என அவர் சட்டசபையில் அறிவித்துள்ளார். நியாய விலை கடைகளில் மார்ச் மாத பொருட்களை வாங்க தவறி இருந்தால் அதனை ஏப்ரல் மாதம் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டட தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ 1000, ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ 1000 வழங்கப்படும் எனவும், பிற மாநிலத்தைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ 1000 மற்றும் கூடுதலாக ரூ 1000 வழங்கப்படும் எனவும், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு 2 நாள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும், இருக்கும் இடத்தைவிட்டு நகர முடியாதவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே சென்று சூடான உணவு வழங்கப்படும், பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும் எனவும், நிவாரண உதவி மற்றும் பொருட்களை பெறுவதற்காக ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '4 நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!!'... 'வைரஸ் தீவிரமடையுது... அத ஒழிக்க ஒரே வழி தான் இருக்கு!'... உலக சுகாதார அமைப்பு காட்டம்!
- இன்று முதல் 'தமிழ்நாட்டில்' 144 தடையுத்தரவு... இதெல்லாம் 'கண்டிப்பா' செய்யவே கூடாது... முழு விவரம் உள்ளே!
- ‘கைதட்டல் வீடியோவை பதிவிட்ட சேவாக்’... ‘ட்விட்டரில் கிளம்பிய பாராட்டும், எதிர்ப்பும்’!
- ‘கொரோனா’ பாதித்தவர்களில் ‘80 சதவீதம்’ பேருக்கு... வெளியாகியுள்ள ‘ஆறுதலான’ செய்தி... ஆனாலும் ‘இது’ அவசியம்...
- மத்தியப் பிரதேசத்தில் அரியணை ஏறுகிறது பா.ஜ.க!... முதலமைச்சர் யார்!?... அவர் பின்னணி என்ன?
- 'லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது’... ‘இதையும் சேர்த்து கண்டிப்பா பண்ணனும்'... 'கொரோனாவை கட்டுப்படுத்த அறிவுரை சொன்ன'... WHO எமெர்ஜென்சி நிபுணர்!
- 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு... உள்ளே நுழையாதே!'... சென்னை மாநகராட்சியின் இந்த ஸ்டிக்கர் சொல்வது என்ன!?
- ‘கொரோனாவால வேலை போச்சா’..‘கவலைப்படாதீங்க எங்க கம்பெனிக்கு வாங்க, நல்ல சம்பளம் தாரோம்’.. பிரபல நிறுவனம் அசத்தல்..!
- ‘கொரோனா அச்சுறுத்தல்’... ‘ரத்தான ரயில் டிக்கெட் கட்டணத்தை’... எப்படி திரும்ப பெறலாம்?
- ‘கொரோனா’ அச்சுறுத்தலால்... வீட்டிலிருந்து ‘வேலை’ செய்பவர்களுக்காக... ‘சிறப்பு’ ஆஃபரை அறிவித்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...