'பிரியாணி' வாங்குனா ஒரு பிளேட் 'சிக்கன் 65' ப்ரீ... 'ஏராளமான' ஆபர்களை வாரி வழங்கும் 'சென்னை ஹோட்டல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிக்கன் பிரியாணி 1 பிளேட் வாங்கினால் ஒரு பிளேட் சிக்கன் 65 இலவசம் என, சென்னை ஹோட்டல்கள் ஏராளமான ஆபர்களை வாரி வழங்கி வருகின்றன.
கொரோனா வைரஸ், பறவைக்காய்ச்சல் என தொடரும் நோய்களால் சிக்கன் பற்றி நினைக்கவே பொதுமக்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் கோழி உற்பத்தி மற்றும் முட்டை உற்பத்தி சரிந்து வருகிறது. இதனால் ஹோட்டல்களின் நிலை தற்போது பரிதாபகரமாக மாறியுள்ளது. குறிப்பாக சிக்கன் பிரியாணி சேல்ஸ் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. பெரிய ஹோட்டல்கள் தொடங்கி தள்ளுவண்டியில் சிக்கன் பிரியாணி விற்பவர்கள் வரை அனைவரையும் இது வெகுவாக பாதித்திருக்கிறது.
ஏராளமானோர் வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள். இதனால் தற்போது சென்னையில் உள்ள ஹோட்டல்கள் ஆபர்களை வாரி வழங்க ஆரம்பித்து இருக்கின்றன. அந்த வகையில் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வாங்கினால், ஒரு பிளேட் சிக்கன் 65 இலவசம் என ஹோட்டல்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதேபோல மற்ற பகுதிகளிலும் இலவச ஆபர்களை ஹோட்டல்கள் வழங்க ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் ஒருவர் கூறுகையில், '' முன்பு நாளொன்றுக்கு 10 கிலோ கோழிக்கறி வாங்கி சிக்கன் பிரியாணி செய்வோம்.
தற்போது அது 3 கிலோவாக குறைந்து விட்டது. இதேபோல 500 முட்டைகள் வாங்கிய நிலைமாறி தற்போது 50 முட்டைகள் மட்டுமே வாங்குகிறோம். வியாபாரம் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களால் எங்களது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது, '' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்