'கொரோனா' அறிகுறியுடன் தப்பி ஓடிய... 'டெல்லி' வாலிபரை வளைத்துப்பிடித்த காவல்துறை... எங்க 'பதுங்கி' இருந்துருக்காரு பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அறிகுறியுடன் விழுப்புரம் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய டெல்லி வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பினாலும் கூட அவர்களை சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இந்த நிலையில் கொரோனா அறிகுறியுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடிய டெல்லி வாலிபர் நிதின் ஷர்மாவை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். நேர்முகத்தேர்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் டெல்லியில் இருந்து புதுச்சேரி வந்த நிதின் விழுப்புரத்தில் தங்கி இருந்துள்ளார்.அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அங்கிருந்த அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டது. ஆனால் சிகிச்சை முடிவுகள் வருமுன்னரே கடந்த 7-ம் தேதி மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். ஆய்வு முடிவில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்தனர். தற்போது செங்கல்பட்டு பகுதியில் உள்ள படாலம் பகுதியில் அவரை கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு கொரோனா...' 'பத்து மாத குழந்தைக்கும் பாசிட்டிவ்...' மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு...!
- ‘மனைவி, குழந்தையை பாக்கணும்போல இருக்கு’.. சென்னையில் விபரீத முடிவெடுத்த வாலிபர்..!
- 'கொரோனா' பாதிப்பால்... முன்னாள் 'கிரிக்கெட்' வீரர் 'உயிரிழப்பு'... 'சோகத்தை' ஏற்படுத்தியுள்ள சம்பவம்...
- சாப்பாடு கொடுத்த ‘சமூக ஆர்வலருக்கு’ கொரோனா தொற்று.. ‘கோவையில்’ 40 போலீசாருக்கு தீவிர பரிசோதனை..!
- 'வீட்டிலிருந்தே' வேலை செய்பவர்கள்... 'இதையெல்லாம்' மட்டும் பண்ணிடாதீங்க... 'எச்சரித்துள்ள' மத்திய 'சைபர்' பிரிவு...
- ஊரடங்கு அமலில் இருப்பதால்... மதுப்பிரியர்களை குஷி படுத்த வாலிபர் செய்த காரியம்!... லைக்குகளுக்கு ஆசைப்பட்டதால் வந்த விபரீதம்!
- வேகமாக வந்த ‘சைரன் வச்ச கார்’.. மடக்கி பிடித்த போலீசார்.. விசாரணையில் அதிரவைத்த இளைஞர் பதில்..!
- '30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும்’... ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’... ‘சீனாவில் இருந்து இந்தியாவிற்கு எப்போது வருகிறது?’
- VIDEO: சாலையில் சிந்திய பாலுக்காக... தெரு நாய்களோடு முண்டியடித்துக் கொண்ட ஏழை!.. இதயத்தை நொறுக்கும் சம்பவம்!
- ‘வாழ்க்கையில் எந்த மகனுக்கும்’... ‘இப்டி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது’... ‘மனப் பாரத்தால் கலங்கிய மகனுக்கு’... ‘முதல்வரின் நெகிழ வைத்த ட்வீட்’!