‘சென்னையில்’ ஒரே நாளில் 500-க்கும் மேல் பாதிப்பு... மோசமான நிலைமை... ‘முந்திக்கொண்டு’ முன்னேறிய ‘தமிழகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில், டெல்லியை பின்னுக்கு தள்ளி தமிழகம் முன்னேறியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டில் 43-ம், பிற மாவட்டங்களில் புதிதாக தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதைடுத்து நாட்டில் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் வரிசையில் டெல்லியை பின்னுக்குதள்ளி 3-வது இடத்திற்கு வந்தது தமிழகம்.
4-ம் இடத்தில் இருந்த தமிழகம், ஒரே நாளில் உயர்ந்த பாதிப்பால் ஒருபடி மேலே போய் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்திலும், குஜராத் 2-ம் இடத்திலும் உள்ளன. இதற்கிடையில் தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடைய 1,867 பேருக்கு இதுவரை கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருந்தவர்கள் 26 மாவட்டங்களில் இருப்பது இதுவரை தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘7 நாளாக தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு’... ‘கதி கலங்கி நிற்கும் நாடு’...
- ஃபோனில் நடந்த ‘டீலிங்?’... ஒப்பந்தம் போட்ட ‘சீன அதிபர்’... பதறவைத்த 'ஜெர்மன்' பத்திரிகை!
- 'கொரோனா மருந்தை கண்டுப்பிடிக்க முயற்சித்தபோது'... 'உயிரிழந்த சென்னை மேனேஜர்’... ‘பரிசோதனையில் புதிய திருப்பம்’!
- 'அதிகரிக்கும் கொரோனாவுக்கு மத்தியில்'... 'தமிழகத்திற்கு நல்ல செய்தி'... 'ஒரே நாளில் புதிய ரெக்கார்ட்'!
- ‘கோடம்பாக்கத்தை’ பின்னுக்குத் தள்ளிய... ‘சென்னையின்’ மற்றொரு ‘ஏரியா’... 500-ஐ தாண்டி கிடுகிடுவென உயர்ந்த பகுதிகளின் நிலவரம்..!
- ‘கொரோனா தொற்று உறுதி செய்தும்’... ‘தமிழகத்தில் கிருஷ்ணகிரி மட்டும்’... ‘பச்சை மண்டலமாகவே இருப்பதற்கு என்ன காரணம்?!
- ‘இந்தியாவில் ஒரே நாளில்’... ‘அதிகபட்சமாக உயர்ந்த பலி எண்ணிக்கை’... ‘31 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு’!
- 'பெண்ணின் உடலை தகனம் செய்ய வந்தபோது’... ‘பொதுமக்களால் நிகழ்ந்த கொடுமை’... ‘துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்’!
- ‘கொரோனா ஆபத்தை அறிந்து இருந்தும்’... ‘சொந்த மக்களுக்கே எச்சரிக்காமல்’... ‘6 நாட்கள் மறைத்த சீனா’... 'வெளியான அதிர்ச்சி தகவல்'!
- 'சீனாவுக்கு ஆதரவாகவே பேசியதால்'... 'அதிபர் ட்ரம்ப் தந்த அதிர்ச்சி'... 'வருந்திய உலக சுகாதார அமைப்பு'!