‘எக்கசக்க பாதிப்பில்’... ‘சென்னையின் இரண்டு ஏரியாக்கள்’... ஒட்டுமொத்த நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மண்டல வாரியான பாதிப்பு விபரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் பாதிப்பு விண்ணைப் பிளந்து செல்கிறது. தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 45.5 சதவீதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடந்த சில நாட்களாக தினமும் சென்னையில் 100-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால், சென்னையில் மொத்த பாதிப்பு 1,257 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில், 290 பேருடன் திரு.வி.க.நகர் ராயபுரத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்தப்படியாக 252 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு பகுதிகள் தான் கொரோனா தொற்றில் சென்னையில் உச்சத்தில் உள்ளது.

அடுத்ததாக தேனாம்பேட்டையில் 145 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 141 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 110, அண்ணாநகரில் 108 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மிகக் குறைவாக மணலியில் 5, சோழிங்கநல்லூர் 5, மாதவரம் 8, பெருங்குடி 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 1007 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். 226 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்