'தமிழகத்தில்' மேலும் '14 நாட்கள்' ஊரடங்கை 'நீட்டிக்க' பரிந்துரை... 'முதல்வருடன்' ஆலோசனை நடத்திய 'நிபுணர்' குழு தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய 19 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்  குழுவுடன் தமிழக முதல்வர் இன்று  ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நிபுணர் குழுவினர், "தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளபோதும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கை மேலும் 14 நாள்கள்  நீட்டிக்க வேண்டும் என்பதை எங்கள் பரிந்துரையாக தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளோம். 

மேலும் அந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் அதிக பரிசோதனைகள் செய்வது மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை ஆய்வு செய்து முழுமையாக பரிசோதனை மேற்கொள்வது ஆகியவை செய்யப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாளை கூட உள்ள தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்