'சவாலான விஷயம் தான்...' 'உலகில்' எங்குமே இப்படி 'நடந்ததில்லை...' அதுவும் '12 மணி நேரத்தில்...' 'இது சாத்தியமா?...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொண்டு 12 மணி நேரத்தில் குணப்படுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன. எனினும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ரெம்டிசிவர் போன்ற மாத்திரைகளை சோதனை அடிப்படையில் மருந்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
இதனிடையே, பிளாஸ்மா தெரபி எனப்படும் குருதி நீர் சிகிச்சையும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களின் ரத்தத்திலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்தது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்த தொடங்கியுள்ளன. பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட பல்வேறு நபர்கள் குணமடைந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையில் முதன்முறையாக கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றியடைந்துள்ளதாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை மூலம் தீவிர கொரோனா நோய் தொற்றில் இருந்த 54 வயது நிரம்பிய ஒருவர் 12 மணி நேரத்தில் குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பிளாஸ்மா முறையை பின்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தலையில் 'அறுவை சிகிச்சை' நடந்த போது... 'செய்ற வேலையா இது...' 'வைரல் புகைப்படம்...'
- ‘டீ வாங்க போன மனைவி’.. அரிவாளுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த ‘மர்மகும்பல்’.. மதுரையில் நடந்த பயங்கரம்..!
- 'தமிழகத்தில்' பரவும் 'தீவிரத்தன்மை' கொண்ட... 'புதிய வகை' கொரோனா வைரஸ்... இது 'வூகானிலிருந்து' பரவியது இல்லை...
- 'ஏழைகளுக்கு' உதவிய 'சலூன் கடைக்காரரின் மகள்...' 'நேத்ராவுக்கு' முதல்வர் 'இ.பி.எஸ், வாழ்த்து...' 'உயர்கல்வி' செலவை 'அரசே ஏற்கும்' என 'அறிவிப்பு...'
- 'ஹலோ நேத்ராவா'... 'வீடு தேடி வந்த அழைப்பு'... 'மதுரை சலூன்' கடைக்காரரின் மகளுக்கு கிடைத்த கெளரவம்!
- தமிழகத்தில் அதிரவைத்த 'கொரோனா' பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... 'ஒரே' நாளில் '12 பேர்' பலி... முழு விவரம் உள்ளே!
- 'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு!?'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்!.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
- 'சென்னை'யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள்... 'இந்த' சர்டிபிகேட்டை காட்டினால்... கொரோனா 'பரிசோதனை' கிடையாது!
- 'அப்பா, அம்மாவால் ஆசிரியரான மகன்!'.. வீட்டை விட்டு விரட்டியதால் 'சுடுகாட்டிற்கு' சென்று 'கழுத்தை' அறுத்துக்கொண்ட 'வயதான பெற்றோர்'!.. 'போவதற்கு முன்' செய்த 'உருக்கமான' காரியம்!
- “அவருக்கு கொரோனா இல்ல.. வந்து அழைச்சுட்டு போங்க!”.. 'நோயாளியின்' சடலத்தை 'புதைத்த' பின் 'மருத்துவமனையில்' இருந்து வந்த 'போன் கால்'!.. 'அதிர்ந்த' குடும்பம்!