‘கொரோனாவா? அதெல்லாம் ஆத்தா பாத்துக்குவா!’.. ‘வேப்பிலைத் தோரணத்துடன்’ சுற்றும் மாநகர பேருந்துகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் கொரோனாவை விரட்டும் விதமாக மாநகரப் பேருந்துகளில் வேப்பிலைத் தோரணம் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளது வைரலாகி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய நோயை விரட்டும் விதமாக உலக சுதாகார மையம் தொடங்கி, உலக நாடுகள் முழுவதும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தமிழகத்தை பொருத்தவரை நாளைய தினம் பாரத பிரதமர் மோடியின் தேசிய அளவிலான ஜனதா ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்துகள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் வீடுகளுக்குள் முடங்கத் தொடங்கியுள்ளனர். பொது இடங்களில் செல்லும் மக்கள் மாஸ்க் அணிந்துகொண்டு செல்கின்றனர். இவ்வகையில் கோவையில் மாநகரப் பேருந்துகளில் வேப்பிலைத் தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டும், மஞ்சள் தெளிக்கப்பட்டும் இயங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

COIMBATORE, BUS, CORONAALERT, PRECAUTIONS, CORONAVIRUSINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்