'தமிழகத்தில் 90% உயிரிழப்புக்கு இதுவே காரணம்'... 'பீதி தேவையில்லை இதை பண்ணுங்க'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையில் 10 சதவீதம் பேர் மட்டுமே நேரடியாக கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், "வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் கொரோனா பாதிப்பைக் கண்டறிவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தமிழகத்தில் அதிக வேகத்தில் பணியாற்றி வருகிறோம். இதுவரை 36 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 2.72 லட்சம் பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 1.29 லட்சம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த பீதி தேவையில்லை. தற்போது வெளியிடப்படும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் 10 சதவீதம் பேர் மட்டுமே நேரடி கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள். மற்ற 90 சதவீதம் பேர் இணை நோய்களையும் கொண்டவர்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதல்களின்படியே அவர்களையும் கொரோனா உயிரிழப்பு பட்டியலில் சேர்க்க வேண்டியுள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
அதேநேரத்தில், லேசான அறிகுறிகள் தென்படும்போதே அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் தான் அரசு மருத்துவர்கள் சவாலின்றி சிகிச்சை அளிக்க முடியும். இதையே நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். அத்துடன் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனைகளை வழங்க தனி மருத்துவப் பிரிவு தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'ஒருபுறம் எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீட்டை விட்டு வெளியேறாத மக்களால்'... 'மறுபுறம் நிகழ்ந்துள்ள பெரும் நன்மை!'...
- 'பெரும்பாலும் இந்த வரிசையில தான் அறிகுறிகள் உண்டாகுது'... 'புதிய தகவலுடன் நம்பிக்கை தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்!'...
- “எல்லாம் முடிஞ்சுதுனு பாத்தா.. திரும்பவும் மொதல்ல இருந்தா?”.. மீண்டும் சீனாவில் வெளியான ‘கிடுகிடுக்க’ வைக்கும் தகவல்!
- “அப்ளை பண்ற எல்லாருக்கும் இ-பாஸ்!!”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா? - போலீஸ் சொல்வது என்ன?
- மீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா' தொற்று... 2-வது அலையா? கலக்கத்தில் சீனா!
- உலகின் முதல் கொரோனா 'தடுப்பூசி' தயாரிப்பில் தீவிரம் காட்டும் நாடு... எப்போது சந்தைக்கு வரும்?... வெளியான புதிய தகவல்!
- திருவள்ளூரில் மேலும் 422 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு உயிரிழப்பா!?.. நெஞ்சை நொறுக்கிய கொரோனா பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!