"நாங்க பார் வாசல்லயே தான் குடிப்போம்..." "அது எங்க உரிமை..." 'இந்த கொரோனா பீதியிலும்...'தாங்க முடியாத 'குடி'மகன்களின் 'அலப்பறை'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதனுடைய வாசலையே ‘குடி’மகன்கள் பாராக மாற்றியுள்ள சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதோடு ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றை மூடும்படியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை, பூங்கா, கோயில்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளின் பார்கள் உள்ளிட்ட அனைத்து பார்களும் வரும் மார்ச் 31ஆம் தேதிவரை மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில்  மதுபானம் வாங்க வரும் ‘குடி’மகன்கள் பார்கள் இல்லாததால், டாஸ்மாக் கடையின் வாசலையே பாராக மாற்றியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. கடையில் மதுபானத்தை வாங்கி வாசலில் வைத்து குடித்து விட்டு அங்கேயே தூக்கி எறிந்து விட்டு செல்கின்றனர். இதனால், டாஸ்மாக் கடைகள் வழக்கத்தை விட கூடுதல் அசுத்தமாக காட்சியளிக்கிறது.

டாஸ்மாக் பார்களை எதற்காக மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதோ, அதன் நோக்கத்தையே சிதைக்கும் விதமாக கடை வாசலிலேயே பாரை ஓபன் செய்த குடி மகன்களால் கொரோனா எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

TASMAC, CORONA FEAR, DRUNKERS, BAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்