‘சென்னை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி’.. யாருக்கு முன்னுரிமை..? மாநகராட்சி ஆணையர் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் முதற்கட்டமாக 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ‘சென்னையில் 15 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் இந்த ஆண்டு 60 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக கடந்த 6 நாட்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 1.05 கோடி மக்களுக்கு, 300 உணவு தயாரிக்கும் கூடங்களில் உணவு தயாரித்து தரமான உணவை வழங்கி இருக்கின்றோம்.
நிவர் மற்றும் புரெவி புயல்களால் சென்னையில் பாதிப்பு இருந்தாலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், கடந்த ஆண்டை விட பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனாலும் ஒரு சில இடங்களில் மழைநீர் அதிகமாக தேங்கி இருந்தது. அதனால் மழைநீர் தேங்கி, மிகவும் சவாலாக கருதப்படும் 23 இடங்களை தேர்ந்தெடுத்து, அந்தபகுதிகளுக்கு இனி எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நிரந்திர தீர்வு காண மாநகராட்சி இன்ஜினீயர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருகிறது.
இன்னும் சில நாட்களில் சென்னையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்ட உள்ளது. மேலும் சென்னையில் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கும், 2ம் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 3ம் கட்டமாக முதியவர்களுக்கும் வழங்கப்படும்’ என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும்’... 'முதல் போட்டியே சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தான்’... ‘வாய்ப்பு கிடைத்தது எப்படி?’... ‘வெளியான தகவல்’...!!!
- 'தமிழகத்தின் இன்றைய (11-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'தடுப்பூசி சோதனைக்குப்பின்'... 'சிலருக்கு HIV பாசிட்டிவ்?!!'... 'ஷாக் கொடுத்த போலி முடிவுகளால்'... 'உடனடியாக பரிசோதனையை நிறுத்திய நாடு!!!'...
- ‘கொரோனாவுக்குப் பின் முதன்முறையாக நடக்கும் போட்டி’... ‘அதுவும் சென்னையில் தான் பர்ஸ்ட்’... ‘பிசிசிஐ வெளியிட்ட அட்டவணை’...!!!
- 'கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள'... 'புதிய வகை நோய் பாதிப்பு?!!'... 'உறுதி செய்து சுகாதார அமைச்சர் ஷைலஜா விளக்கம்!!!'...
- ‘தமிழகத்தில் முதல்கட்டமாக ’... ‘இத்தனை லட்சம் பேருக்கு’... ‘கொரோனா தடுப்பூசி’... வெளியான தகவல்...!!!
- 'சென்னையில் இந்த ஏரியாவில்’... ‘ஜனவரி முதல் மெட்ரோ ரயில் சேவை’... ‘வெளியான தகவல்’...!!!
- 'நாங்க இந்த தேதில கண்டிப்பா...' 'கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போட ஸ்டார்ட் பண்றோம்...' - அதிரடியாக அறிவித்த நாடு...!
- 'தமிழகத்தின் இன்றைய (10-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'கொரோனாவா அப்படின்னா???'... 'இதுவரைக்கும் ஒருத்தருக்குகூட பாதிப்பில்ல!!!'... 'மாஸ்க், சானிடைசர்னு எதுவுமே கிடையாது!!!'... 'இந்தியாவுல இன்னும் இப்படி ஒரு இடமா?!!'...