'முதல்வர்' காப்பீட்டு திட்டத்தின் கீழ்... தனியார் மருத்துவமனைகளில் 'கட்டணமின்றி'... கொரோனா சிகிச்சை பெறலாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

Advertising
Advertising

தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்குச் சிகிச்சை பெறலாம். இதற்காக பொதுமக்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும் அதிகபட்ச கட்டண விவரத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளொறுக்கு அதிகபட்ச தொகுப்புக் கட்டணம் (Package) Grade A1 மற்றும் A2 மருத்துவமனைகளில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறி உள்ளவர்கள் பொதுவார்டில் சிகிச்சைப் பெற ரூ.5,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற நாளொன்றுக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.10,000 முதல் 15,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Grade A3 மற்றும் A4 மருத்துவமனைகளில் பொதுவார்டு கட்டணம் நாளொன்று ரூ.5,000 எனவும் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற நாளொன்றுக்கு தொகுப்பு கட்டணமாக ரூ.9,000 முதல் 13,500 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் பொதுமக்கள் புகார்களை 1800 425 3993 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொண்டு அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மொத்த படுக்கைகளில் 25 சதவிகித படுக்கைகளை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க ஒதுக்கவும் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீடு திட்டப் பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மருத்துவமனைகள் மீது முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கும் இது பொருந்தும் எனப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்