“தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி!”.. “முதல் முறையாக அதிக எண்ணிக்கை!”.. பாதிக்கப்பட்டோர் 124 ஆக உயர்வு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் அறிவித்துள்ளார்.
இவர்களுள் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றதாகவும், அந்த மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அங்கிருந்த பலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அவர்கள் பரிசோதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் இந்த மாநாட்டில் வெளிநாட்டவர்கள் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 74 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 124 ஆக உயர்ந்துள்ளது. இவ்வளவு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிசெய்துள்ளார். மேலும் இதில் 5 பேர் கன்னியாகுமரியிலும், 23 பேர் திருநெல்வேலியிலும், 4 பேர் சென்னையிலும், 18 பேர் நாமக்கலிலும் உள்ள மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வெளில போய்ட்டு 'வீட்டுக்குள்ள' வர்றீங்களா?... கட்டாயம் இதெல்லாம் 'பாலோ' பண்ணுங்க!
- 1 ரூபாய்க்கு ‘சானிடைசர்’ பாக்கெட்.. அசத்திய பிரபல நிறுவனம்.. எங்கெல்லாம் கிடைக்கும்..?
- 'மச்சான் டயர் பஞ்சர் ஆயிடுச்சு'... 'பைக்கை ஓரமா ஒதுக்கு டா'... அடுத்த கணம் காத்திருந்த பயங்கரம்!
- 'வெளிநாடு சென்று வந்த ஊழியர்களை தனிமைப்படுத்தாமல்'... 'அப்படியே அனுமதித்த தனியார் நிறுவனம்’... ‘22 பேருக்கு கொரோனா பரவியதால்’... ‘சீல் வைத்த அதிகாரிகள்’!
- ஸ்மார்ட் போன்களில் 'கொரோனா' வைரஸ்... எத்தனை நாட்கள் 'உயிர்' வாழும்?... 'புதிய' தகவல்!
- "மலிவு விலையில் மருந்து கிடைக்கும்..." "விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்..." 'பிரபல' தனியார் நிறுவனம் 'உறுதி...'
- '2007இல் உலகக் கோப்பை ஹீரோ!'... '2020இல் நிஜ ஹீரோ'... முன்னாள் கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய ஐசிசி!
- 'அழ கூட முடியலியே'...'வரிசையாக வரும் சவப் பெட்டிகள்'...நொறுங்கி நிற்கும் அமெரிக்கா!
- 'வீட்டில்' ஒருவருக்கு 'கொரோனா' தொற்று... 'குடும்பமே மருத்துவமனையில்...' வீட்டில் 'யாரும் இல்லாத' நிலையில்... நிகழ்ந்த 'அதிர்ச்சி சம்பவம்...'
- முதல்வர் மற்றும் 'பிரதமர்' கொரோனா 'நிவாரண' நிதிக்கு... நன்கொடை வழங்கிய 'நட்சத்திர' தம்பதி!