'வீட்டுக்கு' அனுப்பப்படும் 'கொரோனா நோயாளிகள்...!' ' தமிழக அரசு நடவடிக்கை...' ''காரணம் என்ன தெரியுமா?...''

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அறிகுறிகள் தென்படாத நோயாளிகளை அவர்களின் விருப்பத்தின் பேரில், உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி மருத்துவமனை நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது.

சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

எனவே தீவிர சிகிச்சை தேவைப்படும் வயது முதிர்ந்த, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அறிகுறிகள் தென்படாத திடகாத்திரமாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு உரிய அறிவுறைகள் வழங்கி வீட்டுக்கு அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்தது.

ஏற்கனவே டெல்லியில் இதேபோன்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது . இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதற்கான வழிகாட்டுதலை கொடுத்துள்ளது.

அதன்படி, வீட்டில் இருக்கும் நோயாளிகள் தங்களை ஒரு தனி அறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும்  உடை, பாத்திரங்கள் ஆகியவற்றை தனியாக சுத்தம் செய்ய வேண்டும். நோயாளியை கவனித்துக்கொள்ளும் நபரும் எப்போதும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாத்திரைகள் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி எடுத்துக்கொள்ளவேண்டும். நில வேம்பு மற்றும் கபசுர குடிநீர் பருக வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நந்தம்பாக்கம் வர்த்தக மையம் மற்றும் டிஜி வைஷ்ணவ கல்லூரியில் அரசு அமைத்திருக்கும் கண்காணிப்பு மையங்களில் தங்கியிருக்கும் அறிகுறிகள் இல்லாத நோயாளிகளும் தற்போது வீட்டுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்